அருள்மிகு கைலாசநாதர் கோயில், சேர்ந்தபூமங்கலம்

அருள்மிகு கைலாசநாதர் கோயில், சேர்ந்தபூமங்கலம், தூத்துக்குடி மாவட்டம்.

 

மூலவர் : கைலாசநாதர்

அம்பிகை : சௌந்தர்யநாயகி

நவகயிலாயத்தில் ஒன்பதாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார். அகத்தியர் தனது சீடர் உரோமச முனிவருக்காகத் தாமிரபரணி ஆற்றில் விட்ட ஒன்பது மலர்களில் ஒன்பதாவது மலர் சேர்ந்த இடம். இதனால் இவ்வூருக்குச் சேர்ந்த பூமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது தாமிரபரணி ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள். இரண்டும் சேர்ந்து சேர்ந்தபூமங்கலம்ஆயிற்று.

கோயிலுக்கு கோபுரம் கிடையாது. கொடிமரம் உள்ளது. இக்கோயில் கல்வெட்டில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்தமங்கலம் என்றும் அவனிய சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிலர். சேந்தன் என்று குறிப்பிடப்பட்ட பாண்டியன் குலசேகரன் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள் சிலர். நவகைலாயங்களுக்கும் சென்று வழிபட்டால் நவக்கிரக தலங்களுக்கும் சென்று வழிபட்ட பலன் உண்டு.

வழிகாட்டி: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரிலிருந்து வடக்கில் சுமார் 15 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து தெற்கே 20 கி.மீ தொலைவிலும் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது.

வகைப்படுத்தப்பட்ட சைவ ஆலயங்கள்

வகைப்படுத்தப்பட்ட சைவ ஆலயங்கள்

 

அட்டவீரட்ட தலங்கள்

பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கண்டியூர் பிரம்மன் சிரத்தைச் சிவன் கொய்தது
வீரட்டானேஸ்வரர் திருவிற்குடி சலந்தாசுரனைச் சங்கரித்தது
வீரட்டேஸ்வரர் திருக்கோவிலூர் அந்தகாசுரனைச் சங்கரித்தது
வீரட்டானேஸ்வரர் திருவதிகை திரிபுரம் எரித்தது
வீரட்டேஸ்வரர் கீழப்பரசலூர் (திருப்பறியலூர்) தக்கன் சிரம் கொய்தது
வீரட்டேஸ்வரர் வழுவூர் யானையை உரித்தது
வீரட்டேஸ்வரர் கொருக்கை (திருக்குறுக்கை) காமனை எரித்தது
அமிர்தகடேஸ்வரர் திருக்கடையூர் எமனை உதைத்தது

 

சப்த விடங்கத் தலங்கள்

தியாகராஜர் திருவாரூர் திருவாரூர்
தர்ப்பாரண்யேஸ்வரர் திருநள்ளாறு புதுச்சேரி
காயாரோகணேஸ்வரர் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
பிரம்மபுரீஸ்வரர் திருக்குவளை நாகப்பட்டினம்
வாய்மூர்நாதர் திருவாய்மூர் நாகப்பட்டினம்
திருமறைக்காடர் வேதாரண்யம் நாகப்பட்டினம்
கண்ணாயிரநாதர் திருக்காரவாசல் திருவாரூர்

 

சப்தஸ்தானத் தலங்கள்

ஐயாறப்பன் திருவையாறு தஞ்சாவூர்
ஆபத்சகாயேஸ்வரர் திருப்பழனம் தஞ்சாவூர்
சோற்றுத்துறை நாதர் திருச்சோற்றுத்துறை தஞ்சாவூர்
வேதபுரீஸ்வரர் திருவேதிகுடி தஞ்சாவூர்
பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கண்டியூர் தஞ்சாவூர்
புஷ்பவனேஸ்வரர் மேலைத்திருப்பூந்துருத்தி தஞ்சாவூர்
நெய்யாடியப்பர் தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) தஞ்சாவூர்

நவகிரகத் தலங்கள்

சூரியன் பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கண்டியூர்
சந்திரன் கைலாசநாதர் திங்களூர்
வெங்கடாசலபதி திருப்பதி
செவ்வாய் வைத்தியநாதர் வைத்தீசுவரன்கோயில்
பழனி
புதன் சுவேதாரண்யேஸ்வரர்

 

திருவெண்காடு
சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) மதுரை
குரு ஆபத்சகாயேஸ்வரர் ஆலங்குடி
திருச்செந்தூர்
சுக்கிரன் பக்தஜனேஸ்வரர் திருநாவலூர்
திருவரங்கம்
சனி தர்ப்பாரண்யேஸ்வரர் திருநள்ளாறு
குச்சனூர்
இராகு நாகேஸ்வரர் திருநாகேஸ்வரம்
காளத்தியப்பர் காளஹஸ்தி
கேது நாகநாதசுவாமி கீழ்ப்பெரும்பள்ளம்
காளத்தியப்பர் காளஹஸ்தி

நவ கைலாயத் தலங்கள்

பாலைவனேஸ்வரர் பாபநாசம் தஞ்சாவூர்
அம்மநாதர் சேரன்மகாதேவி திருநெல்வேலி
கைலாசநாதர் கோடகநல்லூர் திருநெல்வேலி
கோத பரமேஸ்வரர் குன்னத்தூர் திருநெல்வேலி
கைலாசநாதர் முறப்பநாடு திருநெல்வேலி
கைலாசநாதர் ஸ்ரீவைகுண்டம் திருநெல்வேலி
கைலாசநாதர் தென்திருப்பேரை திருநெல்வேலி
கைலாசநாதர் ராஜபதி தூத்துக்குடி
கைலாசநாதர் சேர்ந்தபூமங்கலம் தூத்துக்குடி

 

பஞ்ச ஆரண்யத் தலங்கள்

முல்லைவனநாதர் திருக்கருகாவூர் முல்லை
சாட்சிநாதர் அவளிவணல்லூர் பாதிரி
பாதாளேஸ்வரர் அரித்துவாரமங்கலம் வன்னி
ஆபத்சகாயேஸ்வரர் ஆலங்குடி பூளை
வில்வாரண்யேஸ்வரர் திருக்கொள்ளம்புதூர் வில்வம்

முக்தி தலங்கள்

தில்லை நடராஜர் சிதம்பரம் தரிசிக்க
அருணாச்சலேஸ்வரர் திருவண்ணாமலை நினைக்க
காசி விஸ்வநாதர் வாரணாசி இறக்க

பஞ்ச சபைகள்

கனகசபை தில்லை நடராஜர் சிதம்பரம்
வெள்ளியம்பலம் சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) மதுரை
தாமிரசபை நெல்லையப்பர் திருநெல்வேலி
இரத்தினசபை வடாரண்யேஸ்வரர் திருவாலங்காடு
சித்திரசபை குற்றாலநாதர் குற்றாலம்

தாண்டவங்கள்

ஆனந்த தாண்டவம் தில்லை நடராஜர் சிதம்பரம்
அசபா தாண்டவம் தியாகராஜர் திருவாரூர்
ஞானசுந்தரத் தாண்டவம் சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) மதுரை
ஊர்த்தவ தாண்டவம் அவிநாசியப்பர் அவிநாசி
பிரம தாண்டவம் திருமுருகநாதர் திருமுருகன்பூண்டி