Tag Archives: தீர்த்தமலை

தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை

அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை, தர்மபுரி மாவட்டம்.

+91-4346 -253599

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தீர்த்தகிரீசுவரர்
அம்மன் வடிவாம்பிகை
தல விருட்சம் பவளமல்லிமரம்
தீர்த்தம் இராமதீர்த்தம், குமாரர், அகத்தியர்,கௌரி, அக்னி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தவசாகிரி
ஊர் தீர்த்தமலை
மாவட்டம் தர்மபுரி
மாநிலம் தமிழ்நாடு

இராவணனை சம்காரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி போகும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார். இராமன் அனுப்பிய அனுமனால் பூஜைக்கு காசியிலிருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வரத் தாமதமாகி விட்டது. ஆஞ்சநேயர் தீர்த்தம் எடுத்து வரத் தாமதமாகி விட்டதால் இராமர் தனது பாணத்தை எடுத்து மலையில் விட்டார். அவர் பாணம் விட்ட பாறையிலிருந்து தீர்த்தம் வந்தது. அதை வைத்து சிவபூஜை நடத்தினார். இதனால் இதற்கு இராமர் தீர்த்தம் என்று பெயர் வந்தது. மேலும் ஆஞ்சநேயர் தான் எடுத்து வந்த தீர்த்தத்தை வீசி எறிய அது 12 கி.மீ. தூரத்தில் தென்பெண்ணையாற்றங்கரையில் விழுந்து, அனுமந்த தீர்த்தம் என்று பெயர் பெற்றது. அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்கு வந்து இராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் விலகும்.

இராம பிரான், சிவபெருமானை இரண்டிடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற இராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்த மலை.