Tag Archives: அமிர்தபுரி

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், அமிர்தபுரி

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், அமிர்தபுரி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 4115- 265 237 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 3 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அமிர்தபுரி

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

எந்த ஒரு செயலையும் இடையூறுகள் எதுவுமில்லாமல் நிறைவேற்றுவதில் விநாயகருக்கு நிகர் யாருமில்லை. விக்னமில்லாமல் முடிப்பதால்தான் அவர் விக்னேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்து விநாயகர் நவக்கிரகங்களுக்கு அதிபதியாக விளங்குகிறார். இவர் தனது குருவான சூரியனை நெற்றியிலும், குளுமை பொருந்திய சந்திரனை வயிற்றிலும், பூமிக்கு அதிபதியாக விளங்கும் செவ்வாயை வலது தொடையிலும், மகாவிஷ்ணுவின் அம்சமான புதனை வலது கீழ்கையிலும், உலகத்திற்கே குருவாக விளங்கும் வியாழனைத் தலையிலும், அசுர குரு சுக்கிரனை இடது கீழ் கையிலும், தெற்கு பார்த்த காகத்துடன் கூடிய பொங்கு சனியை வலது மேல் கையிலும், இராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது காலிலும் கொண்டு அருள்பாலிக்கிறார். பொதுவாக சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மர் அருள்பாவிப்பார். ஆனால் இத்தலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விநாயகரின் முதுகில் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார். காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் என்ற பஞ்ச விகாரங்களை அடக்கினால் யோகம் கிடைக்கும் என்பதற்கிணங்க இங்கு ஐந்து தலைநாகரின் மீது மேற்கு பார்த்த நிலையில் யோக நரசிம்மர் உள்ளார். நோய் தீர்ப்பதற்கு சஞ்சீவி மலையை வலது கையிலும், எதிரியை வெல்வதற்கு கதையை இடது கையிலும், காரிய வெற்றிக்கு வாலில் மணியுடன், கூப்பிட்டவுடன் ஓடிவருவதற்கு, காலை முன்வைத்து தயார் நிலையில் அனுமன் அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயருக்கு பின்புறம் கருடன். இவர் வலது மேல் கையில் அமிர்த கலசமும், இடது மேல்கையில் வாசுகி பாம்பும், வேதத்தை கையில் பிடித்து கும்பிட்ட நிலையில் அருள்பாலிக்கிறார். இவரை சுற்றி நவநாகர்கள் இருப்பதால், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவருக்கு பால் அபிஷேகம் செய்து பலனடையலாம்.