Tag Archives: குமரன் கோட்டம்

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கோவை குமரன் கோட்டம், கோயம்புத்தூர்

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கோவை குமரன் கோட்டம், திருச்சி சாலை, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.

காலை5 மணி முதல்1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுவாமி நாதர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கோயம்புத்தூர்

மாவட்டம்

கோயம்புத்தூர்

மாநிலம்

தமிழ்நாடு

ஆறுமுகனின்ஆறுபணிகள்

தமிழ் மறை நூல்களில் முருகப்பெருமானின் ஆறுமுகங்கள்செய்யும் பணிகள் விளக்கப்பட்டுள்ளன.

1. அறியாமை அகற்றி ஞானம் வழங்குகிறது.

2. பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது.

3. பக்தர்களுக்கு வலிமையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.

4.மறைந்துள்ள இரகசியங்களை வெளிக்கொணர்ந்து மனதில் வைராக்கியத்தை உண்டாக்குகிறது.

5.நல்லவர்களைக்காத்து தீயவர்களை அழிக்கிறது.

6.எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

முருகன் படைத்தல், காத்தல், அழித்தல் மற்றும் எல்லாத்தொழில்களையும் செய்கிறார் என்பது 12 கரங்களில் உள்ள ஆயுதங்களால் விளங்குகிறது. இந்த பூவுலகிலுள்ள ஒவ்வொரு மனிதப்பிறவியும் ஐம்பூதங்களாலும் உள்ளே இருக்கும் ஆன்மாவாலும் ஆனது.

இதே போல் முருகப்பெருமானுக்கு, சிவனின் நெற்றியிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் ஆன்மாவாவும், உடல் ஐம்பூதங்களாலும் அமைந்திருக்கிறது. இது இறைவன் மனிதப்பிறவி எடுக்கும் போது அதற்கேற்ற முறையில் அவரது உருவம் அமைவதை உணர்த்துகிறது.

முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் நான்காம் படைவீடு சுவாமிமலை. தந்தையாகிய சிவ பெருமானுக்கு குருவாக இருந்து, “ஒம்என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருளை உபதேசித்தவர் முருகன். இந்த சுவாமிநாத சுவாமியை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு ஞானமும் கிடைக்கும். ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது கல்விச்செல்வம். இத்தகைய கல்வி செல்வம் வற்றாமல் கிடைப்பதற்காகத்தான் குமரன் கோட்டத்தில் சுவாமிநாதசுவாமி கோயில் எழுந்தருளியிருக்கிறது.