Tag Archives: சிம்மக்கல்

ஆதிசொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை

அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை -625 001

+91 452 2344360

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சொக்கநாதர்
அம்மன் மீனாட்சி
தல விருட்சம் கடம்பமரம்
தீர்த்தம் பொற்றாமரை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் உத்தரவாலவாய் (வடதிருவாலவாய்)
ஊர் சிம்மக்கல், மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

மதுரையை குசேல பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். மன்னன் கல்வியில் மிகச் சிறந்தவன் என்பதை கேள்விப்பட்டு, தமிழ்ச்சங்கத்தில் புலவராக இருந்த கபிலரின் நண்பரான இடைக்காடர், பாண்டியனின் அரண்மனைக்கு சென்று தான் கொண்டு வந்த பாடலால் மன்னனைப் புகழ்ந்து பாடினார். இவரது பாடலால் பொறமைப்பட்ட பாண்டிய மன்னன் சரியாக உபசரிக்காமல் இருந்தான். இதனால் மனம் வருந்திய இடைக்காடர், அங்குள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி,”இறைவா! பாண்டிய மன்னன் தமிழ்புலமை வாய்ந்தவன் என்று நினைத்து அவனைப் பாடினேன். ஆனால், அவனோ பொறாமையால் என்னை அவமதித்து விட்டான். அவன் என்னை அவமதித்தானா, அல்லது உன்னை அவமதித்தானோ என்பது எனக்கு தெரியாதுஎன்று சிவனிடம் விண்ணப்பம் செய்து தணியாத கோபத்துடன் வடதிசை நோக்கி சென்றார்.

இதைக் கேட்ட சிவன், தன்னுடைய லிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியுடன் கோயிலுக்கு நேர் வடக்கே, வைகை ஆற்றுக்கு தெற்கே உள்ள கோயிலில் எழுந்தருளியதுடன், இடைக்காடருக்கும் காட்சி கொடுத்து மன்னனுக்கு பாடம் புகட்டுவதாக கூறினார்.