Tag Archives: திருப்புத்தூர்

வெண்பட்டு பைரவர் (திருத்தளிநாதர்) கோயில், திருப்புத்தூர்

அருள்மிகு வெண்பட்டு பைரவர் (திருத்தளிநாதர்) கோயில், திருப்புத்தூர், சிவகங்கை மாவட்டம்.

+94420 47593 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 முதல் 12.30வரை, மாலை 3.30 முதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும்.

 

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அஷ்ட பைரவர் தலங்கள் உள்ளன. பொதுவாக பைரவர், ஆடையில்லாமல், நாய் வாகனத்துடன் காட்சி தருவார். ஆனால், இவர் வெண்ணிற பட்டாடை அணிந்து, நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார்.

முன்னொரு காலத்தில் கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்த வால்மீகி, தன்னை திருத்திக்கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி, கடுந்தவம் இருந்தார். நீண்டகாலம் தவம் செய்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார். புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் புற்றீஸ்வரர்எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இது. புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், “புத்தூர்என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் திருஎன்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, “திருப்புத்தூர்ஆனது. அதுவே திருப்பத்தூர். பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோயில் கட்டினர்.

அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர்

அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர், சிவகங்கை மாவட்டம்.

+91- 94420 47593 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருத்தளி நாதர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சிவகாமி
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் ஸ்ரீதளி தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் புத்தூர், திருப்புத்தூர்
ஊர் திருப்புத்தூர்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், அப்பர்

முன்னொரு காலத்தில் கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்த வால்மீகி, தன்னை திருத்திக்கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி கடுந்தவம் இருந்தார். நீண்டகாலம் தவம் செய்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார். புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் புற்றீஸ்வரர்எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இது. புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், “புத்தூர்என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் திருஎன்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, “திருப்புத்தூர்ஆனது. பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோயில் கட்டினர்.

சிவ பக்தனான இரண்யாட்சகனுக்கு அந்தகாசுரன், சம்பாசுரன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்கள் சிறந்த சிவபக்தர்களாக இருந்தாலும், தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்தனர். தேவர்கள் சிவபெருமானை துதித்தனர். சிவன் தனது அம்சமாக விஸ்வரூபம் எடுத்து வந்தார்.