Tag Archives: பாகலூர்

அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்

அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்-635 124, கிருட்டிணகிரி(கிருஷ்ணகிரி)

+91- 94436 18811(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – விநாயகர்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பாகலூர்

மாவட்டம்: – கிருட்டிணகிரி(கிருஷ்ணகிரி)

மாநிலம்: – தமிழ்நாடு

சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள் பொழிகிறார். தனது பாதத்தில் சரணடைந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்பதற்கேற்ப இடது பாதத்தை காட்டுகிறார். இந்த விநாயகரை வழிபட்டால் சிவசக்தியை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இக்கோயில் பிற கோயில்களைப்போல் அல்லாமல் இரண்டு அடுக்குமாடியுடன் அமைந்திருப்பது சிறப்பு. கருவறையில் விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முன்புறம் சுவாமி, அம்மன், பிள்ளையார்,