Tag Archives: பிட்டாபுரம்

அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில், பிட்டாபுரம்

அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில், பிட்டாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.
**************************************************************

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிட்டாபுரத்து அம்மன்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் பிட்டாபுரம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலுக்கு வடமேற்கில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தம்மன் கோயில். பேச்சு வழக்கில் புட்டார்த்தியம்மன் என அழைப்பார்கள். இந்த அம்மனுக்கு பிட்டாபுரத்தி, வடவாயில் செல்வி, நெல்லை மாகாளி என பல பெயர்கள் உள்ளன.

இந்த அம்மன் அனைத்து மதத்தினருக்கும் செல்லப்பிள்ளையாக விளங்குகிறாள். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் இத்தலத்திற்கு கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.

அருணாசலக்கவிராயர் தன் வாழ்நாளின் தொடக்கத்தில் இந்த அம்மனிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்திருக்கிறார்.

கோயில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் உள்ள அம்மனை பார்க்கும் போது, அம்மனைப் பிரதிட்டை செய்த பின் கருவறை கட்டியிருக்க வேண்டும் என தோன்றுகிறது.