Tag Archives: மருதமலை

அருள்மிகு முருகன் திருக்கோயில், வேல்கோட்டம், மருதமலை

அருள்மிகு முருகன் திருக்கோயில், வேல்கோட்டம், மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம்.

காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

முருகனின் வேல்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

வேல்கோட்டம்

மாவட்டம்

கோயம்புத்தூர்

மாநிலம் தமிழ்நாடு

அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரத்தில் வேல் பற்றிய சிறப்புகளை ஏராளமான பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார். உற்றார் உறவினர்கள் அனைவரும் கைவிட்ட நிலையில் துணையின்றி தனித்துச் செல்லுகின்ற வழியில் தனக்குத் துணையாக வந்து உதவுவன வடிவேலும் மயிலுமே எனப் பொருள்பட பாடலில் குறிப்பிட்டு உள்ளார். வேல் ஞானத்தில் அம்சம். அந்த வேலைத் தாங்கி இருக்கின்ற முருகப் பெருமானை, ஞான வேல் முருகன் என போற்றுகின்றனர். வேலை வழிபட்டால் ஞானம் உண்டாகும். குமரகுருபர சுவாமிகள் நீண்ட காலம் வாய் பேசமுடியாத நிலையில் இருந்தார். திருச்செந்தூர் முருகனை மனதார வேண்டி அவனே கதி என இருந்தார். ஒருநாள் தன் பக்தனின் வேண்டுதலை ஏற்று குமர குருபரனின் முன் தோன்றி, குருபரா, உனக்கு பேசுகின்ற திறனோடு என்னைப் பாடுகின்ற புலமையினையும் வழங்கினோம் எனக்கூறி அவரது ஞானவேல் கொண்டு எழுதினார். முருகனின் பேராற்றலால் குருபரன் கந்தர் கலிவெண்பாவை பாடினார்.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம்.

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தண்டாயுதபாணி (மருதாசலமூர்த்தி)
அம்மன் வள்ளி, தெய்வானை
தல விருட்சம் மருதமரம்
தீர்த்தம் மருது சுனை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் மருதமலை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை, “பாம்பு வைத்தியர்என்றே அழைத்தனர். ஒருசமயம் இவர், நாகரத்தினப் பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார். அப்போது சட்டைமுனிவர் அவருக்கு காட்சி தந்து, “உடலுக்குள் இருக்கும் பாம்பை (குண்டலினி சக்தி) கண்டறிவதுதான் பிறப்பின் பயனாகும். அதைவிடுத்து காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலையேஎன்றார். அவரது சொல் கேட்ட பாம்பாட்டிச்சித்தர் ஞானம் பெற்றார். உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்றமுடிவுக்கு வந்தார். முருகனை வணங்கி தியானத்தில் ஈடுபட்டார். முருகன் அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். பக்தர்கள் இவரை, “மருதமலை மாமணிஎன்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது. இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார். தினமும் இராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகிறார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். அருணகிரியாரால் பாடப்பெற்றவர் இவர். இத்தலம் ஏழாம்படை வீடாகக் கருதப்படுகிறது.