Tag Archives: திருக்கோலக்கா

அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோயில், திருக்கோலக்கா

அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோயில், திருக்கோலக்கா, சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364-274 175 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சப்தபுரீசுவரர்
அம்மன் ஓசைகொடுத்த நாயகி
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் சூரிய தீர்த்தம், ஆனந்த தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில்
ஊர் திருக்கோலக்கா
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர்

பார்வதிதேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர், பல தலங்களுக்குச் சென்று, தனது சிறு கைகளால் தாளம் போட்டு பாடுவதைப்பார்த்தார் சிவன். குழந்தையின் கைகள் வலிப்பது பொறாமல், அவருக்கு தங்கத்தால் ஆன இரண்டு தாளங்களை கொடுத்தார். தட்டிப்பார்த்தார் சம்பந்தர். ஆனால் அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே அந்த தாளத்திற்கு ஓசை கொடுத்தாள் அம்மன். எனவே தான் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர்எனவும், அம்மன் ஓசைநாயகிஎனவும் அழைக்கப்படுகிறார்கள். இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம். கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள். திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்காஎனப்பட்டது. ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை அடைவார்கள் என்பது கண்கூடான உண்மை. தற்போது திருத்தாளமுடையார் கோவில்என அழைக்கப்படுகிறது.

கோயிலின் எதிரில் திருக்குளம் ஆனந்ததீர்த்தம், முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுனையில் ரிஷபாரூடர் தரிசனம் உள்நுழைந்ததும் வலப்பால் வாகன மண்டபம், நுழையும்போது நால்வர், அதிகார நந்தி சந்நிதிகள் உள்ளன.