Tag Archives: கொடைக்கானல்

அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல்

அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம்.

திருக்கோயில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

தமிழகத்தின் வனப்புமிகு சுற்றுலாத் தலம் கொடைக்கானல் மலை ஆகும். கோடை காலத்தில் அதன் அழகை ரசித்திட வருவோர், அங்கே குடிகொண்டுள்ள குறிஞ்சி ஆண்டவரை தரிசனம் செய்திடாமல் திரும்ப மாட்டார்கள்.

குறிஞ்சி மலர்மலர்களிலேயே தனிச்சிறப்பு பெற்றது. மலைச்சாரலில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூத்துக் குலுங்கும் தனிச் சிறப்பைப் பெற்றது. அப்போது, மலைச் சாரலிலே, அடுக்கடுக்காய் குறிஞ்சி மலர்கள் அணிவகுத்து நிற்பது போன்ற அற்புதத்தைக் கண்டு மகிழ்ந்திடவே மக்கள், கொடைக்கானலுக்கு விரைந்து சென்றிடுவர். அத்தகைய சிறப்பினைக் கொண்ட மலரின் பெயரையே தன்னோடு கொண்டு, முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருக்கோயிலே குறிஞ்சி ஆண்டவர் கோயில்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவுதான். ‘நாயுடுபுரம்சென்று, கோயிலை அடையலாம். நன்கு பராமரிக்கப்பட்டு வரும் அழகிய கோயில். அமைதியான சூழலில் குறிஞ்சி ஆண்டவர் தரிசனம், அற்புதமான மனநிறைவைத் தருவதாகும்.

குறிஞ்சிமலர் பூத்துக்குலுங்கும் பருவத்தில், அந்த மலர்களைக் கொண்டே குறிஞ்சி ஆண்டவருக்கு செய்யப்படும் அலங்காரம் கண்கொள்ளாக் காட்சி ஆகும். சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக, திருக்கோயிலில் தங்கும் விடுதிஒன்றும் உள்ளது. பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தில் அனுமதி பெற்று அங்கு தங்கி, குறிஞ்சி ஆண்டவரை வழிபடலாம்.