Tag Archives: கஞ்சாம்

அருள்மிகு நிமிஷாம்பாள் திருக்கோயில், கஞ்சாம்

அருள்மிகு நிமிஷாம்பாள் திருக்கோயில் கஞ்சாம், மைசூரு கர்நாடகா.
*****************************************************************************

+91 8236 252 640, 98458 01632 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நிமிஷாம்பாள்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் கஞ்சாம்
மாவட்டம் மைசூரு
மாநிலம் கர்நாடகா

முக்தராஜன் என்னும் மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அன்னை பராசக்தியின் பக்தரான அவன், அவளை வழிபட்ட பின்னரே, அன்றாடக் கடமைகளைத் தொடங்குவான். ஒருசமயம், ஜானு சுமண்டலன் என்னும் அசுரன் முக்தராஜனையும், அவன் நாட்டு மக்களையும் துன்புறுத்தினான். முக்தராஜனால் அவனை அடக்க முடியவில்லை. மனிதசக்தியால் இயலாதபோது, தெய்வீக சக்தியின் துணையை நாடுவதே பக்தியின் படிநிலை. தனக்கு விருப்பமான தெய்வமாகிய பராசக்தியை நோக்கி, உணவு, நீரின்றித் தவத்தில் ஆழ்ந்தான். உயிர் மட்டும் உடலில் ஒட்டிக் கொண்டிருக்க உடல் கரைந்து விட்டது. உயிரையும் பொருட்படுத்தாமல், தன் மீது பக்தி செலுத்திய அரசனைக் கண்டு, பராசக்தி உக்ரரூபம் எடுத்து பூமிக்கு வந்தாள். மன்னனுக்கு காட்சி கொடுத்தாள். அநியாய சக்திகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் உயர்ந்த பொதுநல கோரிக்கையை ஏற்றாள். ஜானு சுமண்டலன் முன்பு சென்று, கண்ணை மூடித் திறந்தாள். நிமிஷ நேரத்தில் அவன் சாம்பாலாகி விட்டான். மன்னன், தனக்கு அருள் செய்த அம்பிகைக்கு, அசுரவதம் நடந்த இடத்தில் கோயில் எழுப்பினான். என்றென்றும் அஙகேயே தங்கியிருக்க வேண்டினான். மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கவும், அவர்களின் பொதுநலக் கோரிக்கைக்கு உடனடியாக அருள்புரிய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான். கணநேரத்தில் அருள்புரியும் அம்பிகை என்னும் பொருளில் நிமிஷாம்பாள் என்று பெயர் சூட்டப்பட்டது.