Category Archives: சித்தூர்

அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், நாராயணவனம்

அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், நாராயணவனம், சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்.

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கல்யாண வீரபத்திரர்
அம்மன் பத்ரகாளி
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் நாராயணவனம்
மாவட்டம் சித்தூர்
மாநிலம் ஆந்தர பிரதேசம்

நாராயணபுரத்தை ஆகாசராஜன் ஆண்டு வந்தார். பெருமாள் பக்தரான அவருக்கு புத்திரபாக்கியம் இல்லை. புத்திரகாமேஷ்டி யாகம் நடத்த ஆயத்தமானார். யாகசாலை அமைப்பதற்காக நிலத்தைச் சீர்படுத்தியபோது, பூமிக்கு கீழே ஏர் கலப்பையில் பட்டு ஒரு பெட்டி வெளிப்பட்டது. அப்பெட்டியில், தாமரையின் மத்தியில், பெண் குழந்தையைக் கண்டான் மன்னன். பூமாதேவியின் அம்சமான அக்குழந்தை, அலர் (தாமரை) மேல்

இருந்ததால், “அலர்மேல்மங்கைஎன்று பெயர் சூட்டினான் மன்னன். தாமரைக்கு பத்மம்என்ற பெயரும் உள்ளதால் இவள், “பத்மாவதிஎனவும் அழைக்கப்பட்டாள்.

இதனிடையே பிருகு மகரிஷி, மகாவிஷ்ணுவின் மார்பில் உதைக்கச் சென்றதால் கோபம் கொண்ட மகாலட்சுமி பூலோகம் வந்தாள். அவளைத்தேடி சீனிவாசனாக வந்த பெருமாள், தனது பக்தையான வகுளாதேவியின் மகனாக வளர்ந்தார். ஒருசமயம் அவர் வேட்டைக்குச் சென்றபோது, ஆகாசராஜன் அரண்மனையில் பத்மாவதியைச் சந்தித்து திருமணம் செய்ய முடிவெடுத்தார். அவர்களது திருமணம், நாராயணவனத்தில் நடந்தது.

தன் மகளின் திருமணம் சிறப்பாக நடந்தேற பாதுகாப்பு அருளும்படி, சிவனிடமும், அம்பாளிடமும் ஆகாசராஜன் வேண்டினான்.

அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சத்யவேடு

அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சத்யவேடு, சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்.

+91- 97046 49796 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரபத்திரர்
உற்சவர் கல்யாண வீரபத்திரர்
தல விருட்சம் வில்வம், வேம்பு, அரசு
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சத்திவீடு
ஊர் சத்தியவேடு
மாவட்டம் சித்தூர்
மாநிலம் ஆந்திரம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சத்தியவேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த சிவபக்தர்கள் வீரபத்திரருக்கு கோயில் கட்ட விரும்பினர். வீரபத்திரர் சிலை செய்யும் பணி சிற்பி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டதுபணி முடிந்து, சிலையை மாட்டுவண்டியில் ஏற்றி சத்தியவேடு வந்த போது, வண்டியின் அச்சு முறிந்தது. எனவே, சிலையை இறக்கி வைத்துவிட்டு சக்கரத்தை சரி செய்தனர். மீண்டும் சிலையை தூக்க முயன்றபோது, அது அவ்விடத்தில் இருந்து அசையவில்லை. அப்போது அசரீரி ஒலித்து, சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்யும்படி கூறியது. அதன்படி வீரபத்திரரை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.

குரு வீரபத்திரர்: மூலஸ்தானத்தில் வீரபத்திரருக்கு வலப்புறம் பாணலிங்கம் இருக்கிறது. வீரபத்திரருக்கு பூஜை செய்தபின்பு, லிங்கத்திற்கு பூஜை செய்கின்றனர். இத்தல வீரபத்திரர் தெற்கு நோக்கி காட்சி தருவதால், “குரு வீரபத்திரர்என்ற சிறப்பு பெயர் இருக்கிறது. தென்திசை, சிவனின் குரு அம்சமான தெட்சிணாமூர்த்திக்கு உரியது. கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற வியாழக்கிழமைகளில் இவருக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடும் வழக்கம் உள்ளது. கிரக தோஷம் உள்ளவர்கள் ஹோமம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு, கேது பரிகார ஹோமத்திற்கு ரூ.300, பிற கிரகதோஷ பரிகார ஹோமங்களுக்கு ரூ.1000 கட்டணம். சித்ரா பவுர்ணமியன்று வீரபத்திரர்பத்ரகாளி திருக்கல்யாண வைபவம் நடக்கும்.