Tag Archives: பாரியூர்

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், பாரியூர்

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், பாரியூர், ஈரோடு மாவட்டம்.

+91- 4285 – 222 010, 222 080 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஆதிநாராயணர்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

தீர்த்தம்

கிணற்றுநீர்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

பாரியூர்

மாவட்டம்

ஈரோடு

மாநிலம்

தமிழ்நாடு

விவசாயத்தில் செழித்துத் திகழும் இப்பகுதியில், முன்னொருகாலத்தில் நாட்டில் மழை பொழியாமல் பஞ்சம் ஏற்பட்டது. இதனால், மக்கள் மழை வேண்டி இவ்விடத்தில் சிறிய பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதன்பின் மழை பொழிந்து மக்களின் பஞ்சம் நீங்கியது. பின் மக்கள் இவ்விடத்தில் பெரிய அளவில் கோயில் கட்டி வழிபாட்டிற்கு கொண்டு வந்தனர்.

முன்மண்டபத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் வீர ஆஞ்சநேயர் இருவரும் அருகருகில் இருந்து அருளுகின்றனர். சஞ்சீவி ஆஞ்சநேயர் கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடி, தன் வலதுகாலை மட்டும் சற்று முன்னே தள்ளி வைத்து புறப்படும் கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு ஆஞ்சநேயரின் மூன்று கோலங்களையும் தரிசனம் செய்யலாம்.

அமரபணீஸ்வரர் திருக்கோயில், பாரியூர்

அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில், பாரியூர், ஈரோடு மாவட்டம்.

+91- 4285 – 222 010, 222 080.

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அமரபணீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சவுந்திரநாயகி
தல விருட்சம் மகிழம்
தீர்த்தம் கிணற்று நீர்
ஆகமம் காரணாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பழம்பெரும்பதி
ஊர் பாரியூர்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

தேவர்களை தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்கள் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். தேவர்களால் அசுரர்களை எதிர்க்க முடியவில்லை. எனவே, அவர்கள் சிவனை சரணடைந்து தங்களை அசுரர்களிடம் இருந்து காத்தருளும்படி வேண்டினர். சிவன் தன்னை வேண்டி தவம் செய்யும்படி கூறினார். அதன்படி தேவர்கள் இவ்விடத்தில் இலிங்கத்தை பிரதிட்டை செய்து, சிவனை வேண்டி தவமிருந்து வழிபட்டனர். அவர்களுக்கு காட்சி தந்த சிவன், அசுரர்களை அழித்து தேவர்களை காத்தருளினார். தேவர்களுக்காக அசுரர்களை அழிக்கும் பணியைச் செய்த சிவன் என்பதால், “அமரபணீஸ்வரர்என்ற பெயரும் பெற்றார்.