Monthly Archives: October 2011

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டூர்

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டூர்(சிறுகனூர்), திருச்சி மாவட்டம்.

+91-94438 17385,98949 26090

காலை 7.30- மதியம் 12 மணி, மாலை 4- இரவு 8 மணி. வியாழனன்று காலை காலை 6- மதியம் 12.30 மணி.

மூலவர் பிரம்மபுரீஸ்வரர்
அம்மன் பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி)
தல விருட்சம் மகிழமரம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பிடவூர், திருப்படையூர்
ஊர் திருப்பட்டூர்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். சிவன், தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன்,”ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.

பிரகதீசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு பிரகதீசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 4362- 274476, 223 384

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரகதீசுவரர் , பெருவுடையார்
அம்மன் பெரியநாயகி, வராகியம்மன்
தல விருட்சம் வன்னி மரம்
தீர்த்தம் சிவகங்கை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

இராஜராஜசோழன் சிவபெருமான் மீது கொண்டிருந்த பக்தியால் அவருக்கு ஆத்மார்த்தமாக ஒரு கோயிலை கட்ட விரும்பினான்.

அந்த கோயில் பிரமாண்டமாக இதுவரை யாரும் கட்டாத அளவுக்கு கட்டவேண்டுமென நினைத்தான். அப்படிக் கட்டப்பட்ட கோயில் இந்த உலகம் வியக்கும் உன்னதமான கோயில் (கி.பி.985 – 1012).

இக்கோயிலைக் கட்ட வெளி மாவட்ட, வெளி மாநிலங்களிலிருந்துதான் கற்கள் அனைத்துமே கொண்டுவரப்பட்டிருக்கிறது. கற்களைச் செதுக்கி ஒரு வடிவத்துக்கு கொண்டு வர 25 வருடங்கள் ஆகியதாம். செதுக்கிய கற்களை எடுத்துப் பதப்படுத்த 9 வருடங்கள் ஆனதாம். ஆக மொத்தம் 34 வருடங்கள் ஆகியதாம். கோபுரம் மட்டுமே தரைத்தளத்திலிருந்து 216 அடி உயரமுடையது. அதன் உச்சியில் உள்ள வட்ட வடிவ பிரம்மமந்திரக்கல் 80 டன் எடையுள்ளது. ஒரே கல்லிலாலானது. இங்கிருந்து 7 கி.மீ.தூரத்திற்கு சாரபள்ளம் என்ற ஊர் வரை மணல் கொட்டி அந்த ஒரே ஒரு கல்லை மட்டும் மேலே கொண்டு சென்றனராம். இக்கோபுரம் மேலே உள்ள கலசத்தின் நிழல் கீழே விழாதபடி கட்டப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளின் கட்டிடக் கலை வல்லநர்கள் வந்து பார்த்து வியந்து போன கோயில் இது.

கருவூரார் என்பவர் சித்தர். இவர் அறிவுரைப்படிதான் இராஜராஜசோழன் இக்கோயிலை கட்டியதாக வரலாறு. கோயில் கட்டுவதற்கு முன்பு கருவூரார் இங்கு ரொம்ப காலமாக தியானத்தில் இருந்திருக்கிறார். கோயில் கட்டும்போது முதலில் சுவாமியின் மேல்பாணம் சரியாக பொருந்தவில்லையாம். கருவூரார் மிகவும் வருந்தி ஈசனை நினைத்து உருகி 11 திருவிசைப்பாக்களை பாடியபின்தான் பாணம் பொருந்தியதாகத் தகவல் ஒன்று கூறுகிறது. நாவினால் உமிழ்ந்த என்ற திருவிசைப்பா புகழ் பெற்றது. கருவூரார்க்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.