Tag Archives: மானிஹடா

அருள்மிகு ஹெத்தையம்மன் நாகராஜர் திருக்கோயில், மானிஹடா, மஞ்சக்கம்பை

அருள்மிகு ஹெத்தையம்மன் நாகராஜர் திருக்கோயில், மானிஹடா, மஞ்சக்கம்பை, நீலகிரி மாவட்டம்.

+91-423 228 6258, 94869 04422

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாகராஜர்
அம்மன் ஹெத்தையம்மன்
தலவிருட்சம் ஆலமரம்
தீர்த்தம் சந்தானக்குளம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மஞ்சக்கம்பை
மாவட்டம் நீலகிரி
மாநிலம் தமிழ்நாடு

மலைப்பகுதியான மஞ்சக்கம்பையில் அம்மன் கோயில் கட்டுவதற்காக மானிஹடா என்ற பகுதியில் மண் எடுத்துக் கொண்டிருக்கும் போது திடிரென சப்தம் கேட்டது. அந்த இடத்தில் 2 குகையும், ஒரு நாகராஜர் சிலையும் இருந்தது. பின் அந்த இடத்தில் நாகராஜருக்கும் கோயில் கட்ட குழி வெட்டிய போது பாறை ஒன்று இடையூறாக இருந்தது. அதை அகற்றிய போது அதற்கடியில் நாகம் ஒன்று உயிரோடிருந்தது. இதையடுத்து அந்தந்த இடங்களில் அம்மனுக்கும், நாகராஜருக்கும் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. இந்த நாகம் தற்போதும் கோயிலில் உயிரோடு இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கோயில் நீலகிரி மாவட்டத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மானிஹடா மகா சக்தி என்று மிகப் பெருமையுடன் அழைக்கப்படும் மிக சிறப்பு வாய்ந்த கோயில். அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்து வழிபடும் மிக முக்கியமான கோயில்.

இராமர் அயோத்திக்குத் திரும்பிப் போகும்போது இந்த மஞ்சக்கம்பை மானிஹடா வழியாக சென்றதாக ஐதீகம். இங்குள்ள இராமர் பாதம் மிகப் புனிதமாகப் பக்தர்களால் வணங்கப்படுகிறது.