Category Archives: நவ திருப்பதி

அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில், நத்தம் (வரகுணமங்கை)

அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில், நத்தம் (வரகுணமங்கை) – 628 601, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஜயாஸனர்(பரமபத நாதன்)
உற்சவர் எம்மடர் கடிவான்
தாயார் வரகுண வல்லி, வரகுணமங்க‌ை
தீர்த்தம் அக்னி தீர்த்தம், ‌தேவபுஷ்கரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் நத்தம்(வரகுணமங்கை)
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

நத்தம் என்று ‌சொன்னால்தான் பலருக்கு புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்‌த்தனைப்படி விஜயாசனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி ‌‌கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.

அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம்

அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம் – 628 752, திருக்குளந்தை தூத்துக்குடி மாவட்டம்.

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன்
உற்சவர் மாயக் கூத்தர்
தாயார் அலமேலு மங்கைத் தாயார்,கமலாவதி, குழந்தைவல்லித் தாயார்
தீர்த்தம் பெருங்குளத்தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்குளந்தை
ஊர் பெருங்குளம், திருக்குளந்தை
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

வேதாசரன் என்ற அந்தணருக்குப் பிறந்த கமலாவதி என்ற பெண் பகவானைக் குறித்துத் தவம் செய்ய, பகவான் காட்சி கொடுத்து விவாகம் செய்து கொண்டதாகத் தல வரலாறு. பாலிகை தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அச்மசாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் பகவான் அ‌‌வனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் சொல்வார்கள். தேவர்கள் பிரார்த்தனைப்படி மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றார். இத்தலத்தில் கருடன் பெருமாளுடன் உற்சவராகப் பக்கத்தில் எழுந்தருளியுள்ளார்.