Tag Archives: காரைக்குடி

அருள்மிகு முத்துமாரி அம்மன், காரைக்குடி

அருள்மிகு முத்துமாரி அம்மன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்
***************************************************************************

செட்டிநாட்டுச் சீமையின் முக்கிய நகரான காரைக்குடி நகரின் மையப்பகுதியில் உள்ள முத்துப்பட்டினம் மீனாட்சிபுரத்தில் கோயில் அமைந்துள்ளது.உள்ளது முத்துமாரியம்மன் கோயில்.

1956ம் ஆண்டு நவம்பர் 8ம் நாள் லலிதா என்ற 8வயது சிறுமி காரைக்குடி அருகிலுள்ள மீனாட்சிபுரத்திற்கு உடல் முழுவதும் அம்மையுடன் வந்தாள். தனியாக வந்த அந்த சிறுமியைத் தான்தோன்றி பெருமாள் என்ற தெய்வ அடியார் சந்தித்தார். சிலநாளில் சிறுமியின் வாயிலிருந்து கிளம்பிய வார்த்தைகளெல்லாம் அருள்வாக்காக வெளிவந்து பல அற்புதங்களை நிகழ்த்தியது. சிலநாளில் அந்த சிறுமியின் உடல் மீதிருந்த அம்மை முத்துக்கள் போல் முளைத்தது. சிறுமி படுத்த படுக்கையானாள். பலபேர் சிறுமியை கிண்டலடித்தனர். அதை அவள் பொருட்படுத்தவில்லை. ஒருநாள் தன்னை ஏளனப்படுத்திய ஒருவரை, “உன் தோட்டத்தில் ஒரு கிணறு இருக்கிறது; அந்தக்கிணற்றடியில் இருக்கும் தக்காளிச்செடியில் ஒரே ஒரு தக்காளி இருக்கும். அதைப்பறித்துக் கொண்டு வா“ என்றாள். அவரோ! சிரித்தபடியே,”என் வீட்டிலா? கிணற்றடியிலா? தக்காளிச் செடியா? எனக்கே தெரியாமல் செடியாவது, பழமாவது“ எனக் கிண்டலாகப் பதில் கூறினார்.

அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில், காரைக்குடி

அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில், காரைக்குடி – 630 001. சிவகங்கை மாவட்டம்.
**************************************************************************************************

+91 -4565 2438 861, 99428 23907 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கொப்புடை நாயகி அம்மன் உற்சவர்: – கொப்புடை நாயகி அம்மன்

தல விருட்சம்: – வில்வமரம்

தீர்த்தம்: – கல்லுகட்டி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – காரைக்குடி

மாவட்டம்: – சிவகங்கை

மாநிலம்: – தமிழ்நாடு

ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் காரை மரங்கள் அடர்ந்த, வனப்பகுதியாக இருந்திருக்கிறது. ஊராக அமைப்பதற்காக இந்த காட்டை அழித்து திருத்தி, மக்கள் குடியேற வசதியாக நகர் உண்டு பண்ணினார்கள். காரை வனப்பகுதியில் ஏற்பட்ட ஊரில் மக்கள் குடியேறியதால் இப்பகுதி காரைக்குடி ஆனது. ஊர்கள் தோறும் சிறப்பான கிராம தேவதை கதை போன்றதே இத்தலத்திற்குரிய கதையும் ஆகும். செஞ்சை காட்டுப்பகுதியில் இக்கோயிலின் உபகோயிலான காட்டம்மன் கோயில் உள்ளது. இந்த காட்டம்மனின் தங்கையே கொப்புடையம்மன்.

கொப்புடையம்மனுக்கு பிள்ளைகள் இல்லை. ஆனால் காட்டம்மனுக்கோ ஏழு பிள்ளைகள். இந்த பிள்ளைகளைப் பார்க்க கொப்புடையம்மன் வரும்போது கொழுக்கட்டை முதலான உணவுப் பண்டங்களைத் தானே செய்து குழந்தைகளுக்கு கொடுக்க எடுத்து வருவாள். ஆனால் காட்டம்மன் மலடியான தன் தங்கை இப்பிள்ளைகளை பார்க்கக் கூடாது என்று நினைத்து பிள்ளைகளை ஒளித்து வைப்பாள்.

இதனை அறிந்த தங்கை கொப்புடையம்மன் ஒளித்து வைத்த பிள்ளைகளை கல்லாக்கிவிட்டுப் பின்னர் அங்கிருந்து கோபத்தோடு காரைக்குடி வந்து தெய்வமாகிவிட்டாள் என்று இக்கோயில் குறித்து வரலாற்றுக் கதை சொல்லப்படுகிறது.

ஆதிசங்கரர் வழிபட்ட தலம் : ஆதிசங்கரரே வந்து வழிபாடு செய்த காரைக்குடி அம்மனுக்கு கொப்புடையாள் என்று பெயர். கொப்பு என்றால் கிளை என்று பொருள். இவள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் சுவாலைக் கிரீடத்துடன் பஞ்சலோக உற்சவ திருமேனியாக காட்சி தருகிறாள்.