Tag Archives: கருத்தம்பட்டி

அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில், கருத்தம்பட்டி

அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில், கருத்தம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-421 232 2250 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வாழைத் தோட்டத்து அய்யன்

தல விருட்சம்

கிளுவை மரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கருத்தம்பட்டி

மாவட்டம்

கோயம்புத்தூர்

மாநிலம்

தமிழ்நாடு

மரங்களிலேயே மிகவும் சிறந்த தன்மை உடையது வாழை. இதில் எந்த பொருளும் வீண்போகாது. வாழையடி வாழையாக தழைக்கக்கூடியது. இதைப் போன்றே, வேண்டும் அனைவருக்கும் உதவும் தெய்வம் என்பதால், கருத்தம்பட்டி வாழைத் தோட்டத்து அய்யன் கோவை மவாட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறார்.அய்யனின் இயற்பெயர் சின்னையன். இவர் செங்காளியப்ப கவுண்டரின் மகனாக 1777ல் அவதரித்தார். 12 வயது வரை கல்வி பயின்றார். பின் இவரது தந்தை விருப்பப்படி மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார். மாடு மேய்க்கும் போது கற்களை சேர்த்து தெய்வ உருவமாக்கி வழிபடுவார். ஒருநாள் ஒரு பெரியவர் இவரது வேண்டுகோளை ஏற்று சர்வவிஷ சம்ஹார மந்திரத்தையும், பஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்து அருளினார். அத்துடன் சின்னையனின் வீட்டில் ஒரு அறையில் இதே பெரியவர் சிவபெருமான் உமாதேவியருடன் வீற்றிருக்கும் கோலத்தை காட்டி மறைந்து விட்டார். பின்னர் சின்னையன் தன்னை நாடி வந்தவர்களின் தீராப்பிணியையும், பாம்பு மற்றும் தேள் போன்ற கொடிய நச்சுப்பிராணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபூதியாலும், பஞ்சாட்சர மந்திரத்தாலும் குணப்படுத்தி வந்தார். ஆனால் எவரிடமுமம் கூலி எதிர்பார்க்கவில்லை. ஒரு முறை அப்பகுதி அதிகாரி மனைவியின் வெண்குஷ்ட நோயை திருநீற்றால் குணப்படுத்தியதற்கு ஆயிரம் வெண் பொற்காசுகளை தாசில்தார் கொடுத்தார். ஆனால், சின்னையன் ஏற்காமல் அந்த பணத்தை ஆண்டவனுக்கே செலவழிக்க கூறிவிட்டார். அவர் ஒவ்வொரு ஆண்டும் திருப்பேரூர் சென்று நடராஜரை தரிசிப்பது வழக்கம். தன் 72வது வயதில் திருவாதிரைக்கு முதல் நாள் அவரது மக்கள் அவரை திருப்பேரூருக்கு அழைத்தனர். ஆனால் அவர் நான் நாளை கயிலாச நாதரை தரிசிக்கச் செல்கிறேன்என்று கூறிவிட்டார்.