Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர்

அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர், திருச்சூர், கேரளா மாநிலம்.

+91-487-255 6335, 255 6799, 255 6347, 255 6365 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

மூலவர் உன்னி கிருஷ்ணன்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் குருவாயூர்
மாவட்டம் திருச்சூர்
மாநிலம் கேரளா

குரு பகவானும், வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர். குரு பகவான் சிவனின் அவதாரம். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இங்கு குருவே ஒரு ஊரை எழுப்பியுள்ளார் என்றால் அங்கு இருக்க கூடியவர்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டும்.


வாயு பகவான் தென்றலாகவும் வீசுவார். புயலாகவும் மாறுவார். கண்ணன் தென்றலாக இருப்பான் தன் பக்தர்களுக்கு. புயலாக மாறுவான் கவுரவர்களை போன்ற துஷ்டர்களை தண்டிப்பதற்கு. ஆக எல்லா வகையிலும் உயர்ந்த தலம் குருவாயூர். குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் எனப்படுகிறார். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் மையால் செய்யப்பட்டது இச்சிலை. இந்த சிலையை கிருஷ்ணனே செய்ததாகவும் கூறுவதுண்டு. தன்னைத் தானே சிலையாக வடித்து குருவாயூர் தலத்தில் வந்து அமர்ந்ததாகக் கூறுவதுண்டு. இந்த சிலையை தனது பக்தரான உத்தவரிடம் கண்ணன் கொடுத்தார். உத்தவர் துவாரகையில் வசித்தவர். துவாரகையை கடல் கொள்ளும் என்றும், அந்த சமயத்தில் இந்த சிலை கடலில் மிதக்கும் என்றும், அதை பிரகஸ்பதியான குருபகவானிடம் ஒப்படைத்து அவர் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்யச் சொல்ல வேண்டும் என்றும் சொன்னார்.

அருள்மிகு பாம்பலம்மன் திருக்கோயில், இலட்சுமணம்பட்டி

அருள்மிகு பாம்பலம்மன் திருக்கோயில், லட்சுமணம்பட்டி, பழைய ஜெயங்கொண்டம் அஞ்சல், கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம், தமிழ்நாடு.

9629218546 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

அம்மன் பாம்பலம்மன்
விருட்சம் வேம்பு
தீர்த்தம் காவிரி
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் லட்சுமணம்பட்டி
மாவட்டம் கரூர்
மாநிலம் தமிழ்நாடு

அருள்மிகு ஸ்ரீ பாம்பலம்மன் வேலாயுதம் பாளையதிலிருந்து பிரிந்து வந்ததாக வரலாறு. கொடிய விஷமுடைய மனிதர்களைத் தீண்டிவிட்டால் கோவிலில் வந்து பத்தினி(வேப்பம் இலை அரைத்தது) சாப்பிட்டால் விஷம் முறிந்து குணமடைகின்றனர். குணமாகாத நோய்களுக்காக கோவிலிலே இருந்து பத்தியம் கடைபிடித்தால் நோய் நீங்கி குணமடைகின்றனர். குழந்தை இல்லாதோர் பிரார்த்தனையாக வேண்டிகொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். அருள்மிகு ஸ்ரீ பாம்பலம்மன் திருக்கோயில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கிருஷ்ணராயபுரத்தில்(சித்தலவாய்) இருந்து 9 கி.மீ தொலைவில் லட்சுமணம்பட்டியில் அமைந்துள்ளது. வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறு போன்ற நாட்கள் விசேடமாக இருக்கும்.