Tag Archives: நவகரை

அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி அம்மன் திருக்கோயில், நவகரை

அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி அம்மன் திருக்கோயில், நவகரை-641105. கோயம்புத்தூர் மாவட்டம்.
********************************************************************************************

+91 – 422 – 265 6844 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 முதல் 12.30 மணிவரையிலும், மாலை 5 முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மூலவர்: – மலையாள தேவி துர்காபகவதி

தல விருட்சம்: – விருச்சிக மரம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – நவகரை

மாவட்டம்: – கோயம்புத்தூர்

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே பாற்கடல் கடைந்து அமுதம் எடுப்பதில் போட்டி நடந்தது. அப்போது அந்த அமுதத்தை அருந்த வேண்டி தேவர்கள் இந்த உலகத்தை ஆளும் மலையாள தேவி துர்க்கா பகவதி பிராட்டி அம்மனை வேண்டி மலையாள தேசத்தில் யாகம் செய்தார்கள்.

யாகத்தின் போது பகவதி அம்மன் தோன்றி, தேவர்களையும் மனிதர்களையும் காப்பதற்கு சிவனுக்கும் திருமாலுக்கும் கட்டளையிட்டாள். அந்த கட்டளையை நிறைவேற்றுவதற்காக சிவனும் திருமாலும் கிளம்பும் நேரத்தில் சிவனின் வாகனமான நந்தி, அவர்களிடம் பெருமானே! அன்னை பகவதியின் தரிசனம் உங்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது. ஆனால் சிவ வாகனமான எனக்கு கிடைக்க வில்லையே என மிகவும் வருந்தியது.

உடனே லட்சுமி நாராயணன்,”நந்தியே! நாங்கள் கண்ட காட்சியை நீயும் கண்டு மகிழ்வாய்என்று கூறினார். அதைக்கேட்ட நந்தி மிகுந்த உற்சாகத்துடன் பூமியின் வெளிப்பகுதியில் கொம்பு தெரிய மாபெரும் வடிவெடுத்தது.

அதைக்கண்ட லட்சுமி நாராயணன் குறுக்கிட்டு, “நந்தீஸ்வரா, நீ சாந்தமாகி மண்டியிட்டுப் பூமியை நோக்கி உற்றுப்பார்என்றார். நந்தியும் இந்த இடத்தில் இருந்துகொண்டு திருமால் கூறியபடி செய்தது. அப்போது சிவனுக்கும் திருமாலுக்கும் பகவதி அம்மன் காட்சி கொடுத்தது நந்திக்கும் தெரிந்தது.

நந்தி கண்ட காட்சியை பார்த்த சனிபகவான் மகிழ்ந்து தன்னை மறந்த நிலையில், ஒய்யாரமாக தனது வலது காலை தூக்கி காகத்தின் மீது வைத்து நின்றார். மேலும்,”இந்த காட்சியை காணும் பக்தர்கள் நெய்விளக்கேற்றி வலது புறமாக என்னை சுற்றி வழிபட்டால், ஏழரை நாட்டு சனி, செவ்வாய் தோடம் மற்றும் சகல தோசங்களும் நீங்கி நலம் உண்டாகும்என்றார்.

மகாகணபதி, ஐயப்பன், காவல்ராயன், கயிலைநாதர், புற்று லட்சுமிநாராயணன் என ஒவ்வொருவருக்கும் தனித் தனி சன்னதி உள்ளது.