Tag Archives: சன்னியாசி கிராமம்

அருள்மிகு கல்யாண சீனிவாசர் திருக்கோயில், சன்னியாசி கிராமம்

அருள்மிகு கல்யாண சீனிவாசர் திருக்கோயில், சன்னியாசி கிராமம்திருநெல்வேலி மாவட்டம் .

+91- 462 – 233 4624 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கல்யாண சீனிவாசர்
உற்சவர்
தாயார் அலமேலு தாயார்
தல விருட்சம்
தீர்த்தம் கோபால, சீனிவாச தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வித்யகோபாலபுரம்
ஊர் சன்னியாசி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு முன்பு அல்லல்படும் மனித இனத்தின் மீது கருணை கொண்ட நாராயணன், சீனிவாசன் என்ற திருநாமம் கொண்டு மனித வடிவில் பூவுலகிற்கு வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் தங்கினார். தாமிரபரணியில் குடிகொண்ட அவரை அறிந்து கொண்ட முனிவர்கள், மகரிஷிகள், சித்தர்கள், மகாபுருஷர்கள் என அனைவரும் அவரைத் துதித்து வணங்கி வந்தனர். அவர்களில், சன்னியாசி என்று ஒருவர் இருந்தார். அவருக்கு, சுவாமியின் மனிதரூப காலம் முடிந்து விட்டால், மனித குலம் நற்பயன்கள் பெறமுடியாத சூழல் வந்து விடுமோ என்ற பயம் எற்பட்டது. எனவே, நாராயணனை நோக்கித் தவம் புரிந்தார். அவரது வேண்டுகோளுக்கு செவிசாய்த்த நாராயணர், அருட்காட்சி தந்தார். அவ்விடத்திலேயே கோயில் கொண்டு மக்களைக் காப்பதாகக் கூறி அருளினார். இவ்வாறு, சன்னியாசியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நாராயணர் இத்தலத்தில் வீற்றிருந்து கல்யாண சீனிவாசர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இந்த இடத்துக்கும் சன்னியாசி கிராமம் என்ற பெயர் ஏற்பட்டது.