Tag Archives: இடுகம்பாளையம்

அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், இடுகம்பாளையம்

அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், இடுகம்பாளையம், சிறுமுகை, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4254 – 254 994 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஜெயமங்கள ஆஞ்சநேயர்
தாயார் பர்வதவர்த்தினி
தீர்த்தம் ஏழு தீர்த்தங்கள்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் இடுகம்பாளையம்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

இக்கோயில் உள்ள கல்வெட்டில் கலி 4404-ல் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளதாக இருப்பதாலும், சிவன் பார்வதி கோயில் சுவரில் மீன் சின்னங்கள் பொறிக்கப் பட்டிருப்பதாலும், இக்கோயில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். பெரும்பாலும் ஆஞ்சநேயர் உருவச் சிலைகள் வலதுபுறமாகவோ அல்லது இடதுபுறமாகவோ திரும்பி நின்று கொண்டு கையில் கதை அல்லது சஞ்சீவி மலையை தாங்கியவாறு இருப்பதாகத்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட பார்வையுடன் காட்சி அளிக்கிறார். ஆஞ்சநேயர் இரு கால்களிலும் தாமரை மலர் போன்ற தண்டையும், வலது கையில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்ட நிலையில் ஆசீர்வாதம் செய்யும் வகையிலும், இடது கையில் சவுகந்திக மலருடனும், வாலின் நுனி தலைக்குப்பின்புறம் மணியுடன் நேராக நிமிர்ந்து அனைத்து உயிர்களையும் கனிவோடு நோக்கும் கருணை விழிகளுடன் காட்சி அளிக்கிறார். ஆஞ்சநேயர் கோயிலுக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கி விநாயகர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதில் பூமியிலிருந்து மேலெழுந்த ஒரு நீள்வடிவ சுயம்பு பாறையில் விநாயகர், சூரியன், சந்திரன், ஆதிசேஷன், சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யும் காமதேனு ஆகிய ஆறு வடிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.