Tag Archives: திருப்புடைமருதூர்

நாறும்பூநாத சுவாமி திருக்கோயில், திருப்புடைமருதூர்

அருள்மிகு நாறும்பூநாத சுவாமி திருக்கோயில், திருப்புடைமருதூர், திருநெல்வேலி மாவட்டம்.

+91 – 4634 – 287244

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாறும்பூநாதர்
உற்சவர் பூநாதர்
அம்மன் கோமதியம்பாள்
தல விருட்சம் மருதம்
தீர்த்தம் தாமிரபரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருப்புடைமருதூர்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

ஒரு சமயம் சிவனிடம் தேவர்கள் அனைவரும் காசிக்கு ஒப்பான தலத்தைக் காட்டுமாறு வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவன், பிரம்மதண்டத்தை தரையில் இடும்படிக் கூறினார். அதன்படி, அவர்கள் பிரம்மதண்டத்தை இடவே, அது தாமிரபரணி ஆற்றை அடைந்து திருப்புடைமருதூரில் தற்போது தலம் வீற்றிருக்கும் பகுதிக்கு அருகே கரையில் ஏறி நின்றது. பிரம்மதண்டம் நின்ற இடமே காசிக்கு ஒப்பான தலம் என சிவன் கூறவே, இவ்விடத்திற்கு வந்த தேவர்கள் பிரம்மதண்டத்தை பூஜை செய்து சிவனது அருளைப்பெற்றனர்.

பிற்காலத்தில், இப்பகுதியை வீரமார்த்தாண்ட மன்னர் ஆட்சி செய்து வந்த போது மருதமரங்கள் நிறைந்த வனமாக இருந்த இங்கு வேட்டைக்கு வந்தார். மான் ஒன்றினை கண்ட மன்னன் அதனை தனது அம்பினால் வீழ்த்தினார்.