Tag Archives: தாண்டிக்குடி

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், தாண்டிக்குடி

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், தாண்டிக்குடி, திண்டுக்கல் மாவட்டம்.

+91- 4542- 266 378, +91- 99626 71467

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பாலமுருகன்

பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

தாண்டிக்குதி

ஊர்

தாண்டிக்குடி

மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

முருகப்பெருமான் தன் ஆறாவது படைவீடான பழமுதிர்ச் சோலையில் மலைவளம் கண்டபிறகு, தாண்டிக்குடி வருகிறார். முருகன் இங்கிருக்கும் போதுதான் அகஸ்தியரின் சீடரனான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என் இரண்டு மலைகளை சுமந்து கொண்டு பழநி வந்து சேருகிறார். இதை அறிந்த முருகன் இந்த இரண்டு மலைகளில் ஒன்று தனக்கு இருப்பிடமாகிக் கொள்ள உரியது என கருதி, தாண்டிக்குதிக்கிறார். இதன் காரணமாகவே இந்த இடம் தாண்டிக்குதிஎன்ற அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி தாண்டிக்குடிஆனது.

பன்றிமலை சுவாமிகளின் வேண்டுகோளின்படி முருகனே கோயில் கட்ட தேவையான பொருள்களுக்கு அது சம்பந்தப்பட்ட நபர்களின் கனவில் தோன்றி, அந்தப் பொருள்களை கொடுக்க கூறினார் என்றும், தற்போது கோயிலில் உள்ள மூலவர் சிலை கூட ஸ்தபதி ஒருவரின் கனவில் முருகனே சென்று கூறி அதன் மூலம் நிறுவப்பெற்று, திருப்பணிவேலைகள் முருகப்பெருமானின் மேற்பார்வையிலேயே முடிந்தது.