Tag Archives: வல்லம்

அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில், வல்லம்

அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில், வல்லம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 94435 86453, 98437 36037 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஏகவுரி அம்மன்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் வல்லம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன், தேவர்களைத் துன்புறுத்தினான். இதனால், கலங்கிய தேவர்கள் சிவனிடம், தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், அம்பிகையை அனுப்பினார். அவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து அம்பிகையுடன் சண்டையிட்டான். ஒரு கட்டத்தில் எருமை வடிவம் எடுத்தான். அம்பிகை, அவனை தன் சூலத்தால் குத்தி வதம் செய்தாள். இதனால், அம்பிகைக்கு உக்கிரம் அதிகமானது. முதலில் அசுரனால் துன்பப்பட்ட தேவர்களுக்கு, இப்போது தங்களைக் காக்க வந்த அம்பிகையாலேயே துன்பம் ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் சிவனை வேண்டினர். சிவன் அம்பிகையை நோக்கி,”ஏ கவுரி. சாந்தம் கொள்” (கவுரி என்பது அம்பிகையின் ஒரு பெயர்) என்றார். கணவன் சொல் கேட்ட அம்பிகை சாந்தமானாள். இவளுக்கு கரிகாலற்சோழ மன்னன் இங்கு கோயில் எழுப்பினான். சிவன் அழைத்த பெயரிலேயே இவளுக்கு ஏகவுரியம்மன்என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் வல்லன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் தலத்திற்கு வல்லம் என்றும், அம்பிகைக்கு வல்லத்துக்காளிஎன்றும் பெயர்கள் ஏற்பட்டது.

தீயது அழியும்; நல்லது நடக்கும்: