Tag Archives: உத்திரமேரூர்

அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில், உத்திரமேரூர்

அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில், உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு மணி 7 வரை திறந்திருக்கும்.

மூலவர்

பாலசுப்ரமணியன்

அம்மன்

கஜவள்ளி

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

உத்திரமேரூர்

மாவட்டம் காஞ்சீபுரம்
மாநிலம் தமிழ்நாடு

முனிவர்களின் தவத்துக்கு இடையூறாக இருந்த அசுரர்களைக் கொன்று, முனிவர்களைக் காத்தருள வேலாகி நின்ற வேலவனின் புகழ்பாடும் திருத்தலம் இளையனார் வேலூர். இளையனார் என்றால் முருகன், வேலூர் என்றால் முருகனின் வேல் விழுந்த இடம் என்பது பொருள். உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து வேள்வி செய்யத் தொடங்கினார். அப்போது மலையன், மாகறன் என்ற அழியா வரம்பெற்ற அசுரர்கள் அவரது வேள்விக்கு இடையூறு விளைவித்தனர். இதுகுறித்து காசிப முனிவர், இறைவன் கடம்பநாதரிடம் முறையிட, அவருக்குக் காட்சி தந்த இறைவன், “கவலை வேண்டாம். எனது இளைய மகன் முருகனை அனுப்பி, அவ்விரு அசுரர்களையும் அழித்து, உங்களது வேள்விக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வேன்என்று ஆசி கூறினார். கூடவே முருகனுக்கு துணையாக வாட் படையையும் அனுப்புவதாக கூறினார். தந்தை ஈசனின் கட்டளையை சிரமேற்று, காசிப முனிவரின் வேள்வியைக் காக்க வேலவன் விரைந்து புறப்பட்டான். முதலில் மலையனையும், மாகறனையும் அழைத்து நல்லுபதேசம் செய்தார். ஆனால் கர்வம் தலைக்கேறிய அவர்கள் முருகனின் நல்லுரையை ஏற்கவில்லை.