Tag Archives: திண்டல்மலை

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல்மலை

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல்மலை, ஈரோடு மாவட்டம்.

+91-424-2430114, 94439 44640 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

இறைவன் வேலாயுத சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
கிராமம்/நகரம் திண்டல்மலை
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு


ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று. இவர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

இங்கு அமைந்துள்ள இடும்பனாருக்கு ஒரு சிறப்பு உள்ளது. பூந்துறை நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட போது வேளாளர்கள் ஒன்று கூடி இடும்பக் குமரனை வேண்டி அவர் மூலம் நாட்டில் மழை பெய்ய வேண்டிக் கொண்டனர். வேண்டுதலுக்கு பின் மழை பெய்து வளம் ஏற்பட்டது என்ற வரலாறு உண்டு. இங்குள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளை பெற்று வருவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.