Tag Archives: திருந்துதேவன்குடி

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி, வேப்பத்தூர் போஸ்ட், திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 435 – 2000 240, 99940 15871 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கற்கடேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் அபூர்வநாயகி, அருமருந்துநாயகி
தல விருட்சம் நங்கை மரம்
தீர்த்தம் நவபாஷாண தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கற்கடேஸ்வரம்
ஊர் திருந்துதேவன்குடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

ஒரு சமயம் துர்வாச முனிவர், சிவபூஜை செய்து விட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் நடையைப் பார்த்து, “நீர் நண்டு ஊர்ந்து செல்வதைப் போல நடக்கிறீர்என்று கேலி செய்ததுடன், அவரைப் போல நடந்தும் காட்டி அவமானப்படுத்தினான். கோபம் கொண்ட துர்வாசர், அவனை நண்டாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். துர்வாசரின் அறிவுரைப்படி இத்தலத்தில் நண்டு வடிவில் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றான். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையை இப்போதும் காணலாம். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர் கற்கடேஸ்வரர்என்று பெயர் பெற்றார்.

இந்திரன் தன் ஆணவம் நீங்க, குரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்தான். இங்கிருந்த புஷ்கரிணியில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து வழிபாடு செய்து திருந்தினான். இதனால் இத்தலம், “திருந்து தேவன்குடிஎன்றழைக்கப்படுகிறது. இப்பெயரைச் சொன்னால் உள்ளூர்வாசிகளுக்கு தெரிவதில்லை. “நண்டுகோயில்என்று சொன்னால் தான் புரியும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது, வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலம் இது.