Tag Archives: வீராம்பட்டினம்

அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், வீராம்பட்டினம்

அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், வீராம்பட்டினம் – 605 007 புதுச்சேரி மாவட்டம்.

+91-413-260 0052 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் செங்கழுநீர் அம்மன்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் வீராம்பட்டினம்
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுச்சேரி

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வீரராகவர் என்ற மீனவர் இவ்வூரில் வாழ்ந்து வந்தார். இவர் அதிக தெய்வ பக்தி கொண்டவர். ஒரு நாள் காலை இவர் தன் தோளில் மீன்பிடிக்கும் வலையை சுமந்து, ஊருக்கு மேற்கேயுள்ள செங்கழுநீர் ஓடைக்கு சென்று மீன் பிடிப்பதற்காக வலையை வீசினார். காலையிலிருந்து வலை வீசியும் ஒரு மீன் கூடக் கிடைக்காததால் வீரராகவர் கவலைப்பட்டார்.

கடைசி முறையாக ஓடையில் வலைவீசி இழுத்த போது, வலை கனமாக இருப்பதைக் கண்டார். வலை கனமாக இருப்பதால் சிக்கியிருப்பது மீன்தான் என்று நினைத்து மகிழ்ச்சியுடன் இழுத்துக்கொண்டே வந்தார். ஆனால் சிக்கியிருந்தது மீனுக்கு பதில் உருண்டையான மரக்கட்டை. ஆண்டவன் இன்று நமக்கு அளித்த படி இது தான் என்று நினைத்தபடி இந்த மரக்கட்டடையை வீட்டிற்கு எடுத்துச்சென்று கொல்லைப்புறத்தில் போட்டார்.

சில நாட்களுக்குப்பின், அடுப்பு எரிப்பதற்காக விறகு இல்லாமல் போகவே வீரராகவரின் மனைவி வீட்டின் பின் புறத்தில் இருந்த மரக்கட்டையை உடைத்து விறகாக உபயோகிக்கக் கோடாரியால் மரத்தை பிளக்க முயன்றார். மரத்துண்டின் மீது கோடாரி பட்டதும் மரக்கட்டை பிளக்கவில்லை. அதற்குப்பதில் கோடாரி பட்ட இடத்திலிருந்து ரத்தம் பெருகியது. இதனால் வீரராகவரின் மனைவி பதறிப்போனார்.