Tag Archives: ராசிபுரம்

கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்.

+91- 4287 – 223 252,+91- 94435 15036, +91-99943 79727

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் அறம்வளர்த்தநாயகி
தல விருட்சம் வில்வம், நெல்லி
தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ராஜபுரம்
ஊர் ராசிபுரம்
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

வல்வில் ஓரி என்னும் மன்னன் கொல்லிமலையை தலைநகராக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். வில் வித்தையில் வீரனான இம்மன்னன் சிறந்த சிவபக்தன். ஒருசமயம் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தான். வனத்தில் நீண்டநேரமாக தேடியும் ஒரு மிருகம்கூட கண்ணுக்கு சிக்கவில்லை. களைத்துப்போன ஓரி மன்னன், ஓரிடத்தில் வெண்பன்றியைக் கண்டான். உடனே பன்றி மீது அம்பை எய்தான். அம்பினால் தாக்கப்பட்ட பன்றி, அங்கிருந்து ஓடியது. மன்னன் பின்தொடர்ந்தான்.

அருள்மிகு நித்யசுமங்கலி மாரியம்மன் திருக்கோயில், ராசிபுரம்

அருள்மிகு நித்யசுமங்கலி மாரியம்மன் திருக்கோயில், ராசிபுரம் – 637 408. நாமக்கல் மாவட்டம்.
*********************************************************************************************************

+91- 4287 – 220 411, 99940 71835 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாரியம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் ராசிபுரம்
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதி வயலாக இருந்தது. இதில் விவசாயம் செய்து வந்த விவசாயி ஒருவர், வயலில் உழுது கொண்டிருந்தார். அப்போது ஓரிடத்தில் ரத்தம் வெளிப்பட்டது. பயந்த விவசாயி, மக்களை அழைத்து வந்தார். அவர்கள் இவ்விடத்தில் தோண்டியபோது சுயம்பு வடிவம் ஒன்று இருந்தது. அப்போது அருள் வந்த அம்பிகையின் பக்தர் ஒருவர் மூலம் தனக்கு அவ்விடத்தில் கோயில் கட்டும்படி கூறினாள்.

அதன்பிறகு மக்கள் சுயம்பு கிடைத்த இடத்திலேயே கோயில் கட்டினர். பிற்காலத்தில் சுயம்புவாக இருந்த அம்பிகைக்கு பின்புறத்தில், மாரியம்மன் உருவச்சிலையையும் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.

இத்தல அம்மனுக்கு பச்சரிசி சாதம் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

இத்தல விநாயகர் அனுக்கை விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இக்கோயில் விமானம் எண்கோண விமானம் ஆகும்.