Tag Archives: அகரம்

அருள்மிகு அஞ்சேல் பெருமாள் திருக்கோயில், அகரம்

அருள்மிகு அஞ்சேல் பெருமாள் திருக்கோயில், அகரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91 4630 – 261 142 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அஞ்சேல் பெருமாள்

தீர்த்தம்

சம்பு தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அகரம்

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

அகரம் கிராமத்தில் மித்ரசகா என்ற நாடகக் கலைஞன் வாழ்ந்து வந்தான். இவன் தன் குழுவினருடன் நாடெங்கும் சென்று நல்ல கருத்துக்களை நாடகம் மூலம் பரப்பி வந்தான். ஒரு முறை காஷ்மீரில் தன் இஷ்ட தெய்வமான நாராயணனின் தசாவதாரக்கதையை நடத்தி காட்டினான். அதை காணவந்த காஷ்மீர் மன்னன் குங்குமாங்கனும், இளவரசி சந்திரமாலினியும் அகமகிழ்ந்தனர். சந்திரமாலினிக்கு மித்ரசகாவின் மீது காதல் உண்டானது. பெற்றோரின் ஒப்புதலுடன் மணமுடித்து அகரம் கிராமத்திற்கு வந்தனர். அனைவரும் பாராட்டும் படி வாழந்த இத்தம்பதியினர் வயோதிக காலத்தில் ஒர் ஆசிரமம் அமைத்து இறைப்பணியில் ஈடுபட்டனர். நாராயணனின் சிறந்த பக்தர்களாக விளங்கினர். இவர்களது பக்திக்கு மெச்சிய நாராயணன், மாசி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் தசாவதாரக் காட்சி தந்து ஓம் நமோ பகவதே வாசுதேவாயஎனும் அற்புத மந்திரத்தையும் உபதேசித்தார்.

இறைவனின் அவதாரம், பெருமை இவற்றை விளக்கி சொல்லும் நூல்களைப் புராணம் என்கிறோம். தாமிரபரணி மகாத்மிய புராணம் ஒரு முக்கிய நூல். அதில்தான் அகத்தியரால் ஏற்படுத்தப்பட்ட தாமிரபரணி நதி பற்றியும், அதன் கரையோரத்திலுள்ள புண்ணிய ஸ்தலங்களின் வரலாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அகரம் பெருமாள் கோயிலும் இதில் ஒன்று. இங்குதான் மகாவிஷ்ணு தன் பத்து அவதார காட்சிகளையும் தந்திருக்கிறார்.

அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம்

அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம் (தாடிக்கொம்பு)- 624 709. திண்டுக்கல் மாவட்டம்.

+91 98657 72875 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்தாலம்மன்

உற்சவர்: – கிளி ஏந்திய முத்தாலம்மன்

தல விருட்சம்: – அரசு

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – அகரம்

மாவட்டம்: – திண்டுக்கல்

மாநிலம்: – தமிழ்நாடு

விசயநகரப் பேரரசு காலத்தில் வடநாட்டில் வசித்த சக்கராயர் அய்யர் என்ற பக்தர் தென்திசை வந்தார்.

வருமுன், அவர் தினமும் வணங்கும் அம்பாளை நோக்கி,”அம்மா. நான் தென் திசை செல்லுகின்றேன். அங்கு எந்தக் கோயிலில் உன்னை வணங்குவேன்?” என்று கேட்டார். அதற்கு அம்பாளும், “இங்கிருந்து கொஞ்சம் மண் எடுத்துக்கொண்டு செல். எங்கே இருந்து என்னை வணங்க நினைக்கிறாயோ அந்த இடத்தில் இந்த மண்ணை வைத்துவிட்டு என்னை அழை. நான் வருவேன்என்றாள். அதன்படி வரும்போது, அவர் வணங்கி வந்த அம்பாள் கோயிலில் இருந்து சிறிது மண் எடுத்துக் கொண்டு வந்தார். அம்பிகை உத்தரவுப்படி அம்மண்ணை இவ்விடத்தில். அங்கு ஒரு கல்லை மட்டும் வைத்து அம்பிகையை வணங்கி வந்தார். பிற்காலத்தில் இங்கு வசித்த பக்தர் ஒருவர் மூன்று அம்பிகையர் சிலை வடித்து பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினார். அம்பிகைக்கு முத்தாலம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. முத்தாலம்மனுக்காக தோன்றிய முதல் தலமாக கருதப்படுவதால், தமிழ் எழுத்துக்களில் அகரமே முதன்மை என்பதன் அடிப்படையில் ஊருக்கு அகரம்என்ற பெயர் ஏற்பட்டது.