Tag Archives: சோலைக்கவுண்டன்பட்டி

அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில், சோலைக்கவுண்டன்பட்டி

அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில், சோலைக்கவுண்டன்பட்டி, விருதுநகர் மாவட்டம்.

+91- 4562 – 394 299, 324 299, 94889 62220

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருவேங்கடமுடையான் (சீனிவாசப்பெருமாள்)

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

சோலைக்கவுண்டன்பட்டி

மாவட்டம்

விருதுநகர்

மாநிலம்

தமிழ்நாடு

என்ன இராசி, என்ன நட்சத்திரம் என தெரியாவிட்டாலும் விருதுநகரிலிருந்து 8 கி.மீ., தூரத்தில் உள்ள சோலைக்கவுண்டன்பட்டி சீனிவாசப்பெருமாள் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் அதன் பலன் அவரவர் இராசி, நட்சத்திரத்திற்கு வந்து சேர்ந்து விடும் எனக் கோயில் தல வரலாறு கூறுகிறது. இப்படி அந்தந்த இராசி, நட்சத்திரத்திற்குரிய பலனை பெருமாள் அள்ளிவழங்குவதால் இவரை நம்பெருமாள்என்று இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

மூலவர் திருவேங்கடமுடையான் என்ற சீனிவாசப்பெருமாள். ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

கோயிலின் சிறப்பம்சமே இராசிக்கட்டமும், இராசிக்கு அதிபதியும் இருப்பதுதான். எனவே இராசி நட்சத்திரம் தெரியாமல் இருக்கும் பக்தர்கள் இத்தலம் வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்தால் அவரவர்களுக்குரிய பலன் கிடைக்கிறது.