Tag Archives: முகப்பேர்

கற்பக சௌந்தரி உடனுறை கற்பகேஸ்வரர் திருக்கோயில், முகப்பேர்

அருள்மிகு கற்பக சௌந்தரி உடனுறை கற்பகேஸ்வரர் திருக்கோயில், முகப்பேர், சென்னை

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, பல காலம் பூஜிக்கப்பட்டு, சில நூறு ஆண்டுகள் பூமிக்குள் புதைந்து கிடந்து, சில காலத்திற்கு முன் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்.

அழுக்காக; பாசிபடர்ந்து; சில சமயம் சிதைந்து பின்னமாகிக்கூட இருக்கலாம் என்றுதானே நினைத்தீர்கள்? ஆனால் இந்த இலிங்கம், மிகவும் கம்பீரமாக நேற்று வடிக்கப்பட்டது போன்ற வனப்புடன் காட்சியளிக்கிறது.

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ளது இந்த ஆலயம். புரான காலத்தில் மகப்பேறு என்றழைக்கப்பட்ட தலம்தான் இன்று மருவி முகப்பேர் ஆகியுள்ளது. இந்த ஆலயத்தின் பெயர், “கற்பக சௌந்தரி உடனுறையும் கற்பகேஸ்வரர் திருக்கோயில்.”