Tag Archives: கதித்த மலை

அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், கதித்த மலை

அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், கதித்த மலை, ஊத்துக்குளி, ஈரோடு மாவட்டம்.

+91- 4294-262 052, +91- 4294-262 054 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வெற்றி வேலாயுதன்

அம்மன்

வள்ளி, தெய்வானை(தனிக் கோயில்)

தீர்த்தம்

முருகன் உண்டாக்கிய தீர்த்தம் மலை மீது உள்ளது

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

கதித்த மலை

மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

முருகன் குடிகொண்டுள்ள தலங்களுக் கெல்லாம் அகத்தியர் தரிசிக்க சென் றார். அவருடன் நாரதர் மற் றும் பல தேவர் களும் உடன் வருகின்றனர். பூஜைக் குரிய நேரம் வந்ததும் அகத்தியர் ஓரிடத்தில் முருகனுக்கு பூஜை நைவேத்தியம் செய்ய நீரின்றி தவித்தார். அவருக்கு தாகமும் ஏற்பட்டது. இதனால் முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றினார். தம் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்று ஏற்படுத்தினார். நீர் பெருக்கெடுத்து ஓடியது.

அகத்தியரும் மகிழ்ச்சியுடன் பூஜைகளை முடித்து கொண்டு தன் தாகத்தையும் தீர்த்துக்கொண்டார். முருகனால் அன்று ஏற்படுத்தப் பட்ட ஊற்று வற்றாமல் இன்று வரை நீரை கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் ஊத்துக்குளிஎன அப் பகுதி அழைக்கப்பட்டது. இந்த அற்புதத்தை நிகழ்த்திய முருகனுக்கு கோயிலும் கட்டப்பட்டது.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்என்பதற்கேற்ப ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி கதித்தமலையில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.