Tag Archives: ஈங்கூர்

அருள்மிகு தம்பிராட்டியம்மன் திருக்கோயில், ஈங்கூர்

அருள்மிகு தம்பிராட்டியம்மன் திருக்கோயில், ஈங்கூர்– 638058, ஈரோடு மாவட்டம்.

+91 – 4294 – 230 487 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தம்பிராட்டியம்மன்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் ஈங்கூர்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

கொங்கு வேளாள கவுண்டர்களில் ஒரு பிரிவான ஈஞ்சன் குலத்தினரின் தெய்வமாக இவள் விளங்குகிறாள். ஈங்கூரில் காவிலுவர், சிங்களவர், மாவிலுவர், பூவிலுவர், வெள்ளை வேட்டுவன் ஆகிய இனத்தவர் வசித்து வந்தனர். அப்போது இவ்வூர் சோழ ஆட்சியின் கீழ் இருந்தது.

இந்த இனத்தவர்கள் அரசுக்கு வரி செலுத்தாமல் சோழ மன்னருக்கு பெரும் தலைவலி கொடுத்து வந்தனர். அவர்களை சமாளிக்க வழியில்லாமல் தவித்த சோழன், இந்த இனத்தவர்களையும் அடக்குபவர்களுக்குக் காணி நிலம் கொடுப்பதாக அறிவித்தான்.

தஞ்சையில் வசித்து வந்த ஈஞ்சன் குலத்தவர்கள் ரகுநாதசிங்கய்ய கவுண்டர் என்பவரை தளபதியாக கொண்டு அவர்களை அடக்கினர். இதற்கு பிரதிபலனாக ஈஞ்சன் குலத்தினர் 88 ஊர்களை காணிக்கையாகப் பெற்றனர்.

ஈங்கூரில் வந்து குடியேறிய ஈஞ்சன் குலத்தினருக்கு, மூவேந்தர்களின் எல்லையாக திகழ்ந்த மாயனூர் அருகே மதுக்கரையில் அருள்பாலிக்கும் செல்லாண்டியம்மன் குல தெய்வமாக விளங்கினார். செல்லாண்டியம்மனை அடுத்து, பெருமாளை தங்கள் விருப்ப தெய்வமாக வணங்கினர்.

ஆண்டுதோறும் பெருமாளுக்கு முடிக்காணிக்கை செலுத்துவதற்காக ஸ்ரீரங்கத்துக்கு செல்லும் வழக்கத்தை ஈஞ்சன் குல மக்கள் கடைபிடித்தனர். ஒருமுறை ஸ்ரீரங்கம் செல்லும் போது, இடையில் இளைப்பாறி செல்வதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தனர். அப்போது, நிதிக்காப்பாளராக செயல்பட்ட பெரியவர், இளைப்பாறிய இடத்திலேயே பணமுடிப்பை மறந்து வைத்து விட்டு பயணத்தை தொடர்ந்தார்.