Tag Archives: ஸ்ரீவைகுண்டம்

அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், வரதராஜபுரம், ஸ்ரீவைகுண்டம்

அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், வரதராஜபுரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம்.

+91 93642 36976, 98941 07945

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மயிலேறும் பெருமான் சாஸ்தா
அம்மன் பாதாளகன்னியம்மன்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிலுள்ள நளங்குடியில் ஏழு அண்ணன் மார்களுக்கு ஒரே தங்கையாக பிறந்தவள் கன்னியம்மன். அழகான தோற்றம் கொண்ட இவரை, திருமணம் செய்ய ஆங்கிலேய ஆட்சியாளர் ஒருவர் விரும்பியுள்ளார். இதற்கு ஏழு அண்ணன் மார்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருமணம் செய்துதர மறுத்தால் ஆங்கிலேயர்களின் கொடுங்கோலான ஆட்சியாளர்கள் விதிக்கும் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பதையும் உணர்ந்தனர். இதனால் ஏழு அண்ணன் மார்களும் ஆலோசித்து, நளங்குடியில் எழுந்தருளியுள்ள தங்கள் குல தெய்வமான மயிலேறும் பெருமான் சாஸ்தா கோயில் சன்னதி அருகில் பெரிய அளவிலான குழி தோண்டி உயிருடன் தங்கை கன்னியம்மனைப் பூமியில் இறக்கினர். இறக்கப்பட்ட இடத்தில் தங்கையின் ஞாபகார்த்தமாக பாதாள கன்னி அம்மன் என்ற பெயரில் கோயில் கட்டி வழிபாடும் நடத்தினர். தற்போதும் மயிலேறும் பெருமான் சாஸ்தா சன்னதி அருகில் உள்ள பாதாள கன்னியம்மனுக்கு தினசரி இரண்டு கால பூஜைகள் நடந்து வருகிறது.

மூலஸ்தானத்திலுள்ள மயிலேறும் பெருமான் சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்துள்ளார். சுவாமிக்கு எதிராக மயில், யானை, குதிரை, நாய் வாகனங்களும், முருகன் வேடத்தில் சாஸ்தா அமர்ந்திருப்பதால் சைவமாக சுடலையும் எழுந்தருளியுள்ளார். சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்திருப்பதன் ரகசியம் தெரியவரவில்லை.

அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம்

அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி அருகில், தூத்துக்குடி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுப்ரமணியர்
தீர்த்தம் தாமிரபரணி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

கோயிலுக்கு எதிரில், சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த வேம்பும் அரசும் பின்னிப் பிணைந்தபடி நிற்க, மரத்தடியில் நாகர் விக்கிரகங்கள் அமைந்துள்ளன. சனிக் கிழமைகளில் (புரட்டாசி சனியில் வழிபடுவது கூடுதல் விசேஷம்) தாமிரபரணியில் நீராடி, ஈரத்துணியுடனேயே சென்று பச்சரிசி, எள் ஆகியவற்றை நாகர் சிலைகளின் மீது தூவி, மஞ்சள் மற்றும் பாலால் அபிஷேகித்து வழிபட, சர்ப்ப தோஷம் நீங்கும்; சகல சௌபாக்கியங்களுடன் வாழ்க்கை அமையும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் இந்த முருகப்பனை மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்.