Tag Archives: மடப்புரம்

அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில், மடப்புரம்

அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில், மடப்புரம், சிவகங்கை மாவட்டம்.

+91 – 4575 272411(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – பத்ரகாளி

தல விருட்சம்: – வேம்பு

தீர்த்தம்: – பிரம்மகுண்டம், மணிகர்ணி தீர்த்தம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – மடப்புரம்

மாவட்டம்: – சிவகங்கை

மாநிலம்: – தமிழ்நாடு

ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதி கேசனை எடுத்து மதுரையை வளைத்தார்.

மேற்கே திருவேடகமும் தெற்கே திருப்பரங்குன்றமும் வடக்கே திருமாலிருஞ்சோலையும் வைத்து எல்லையை வகுத்த இறைவன் கிழக்கில் தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார். இதனால் ஆதிகேசனின் வாயில் இருந்து வெளியான நஞ்சை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளினாள்.