Tag Archives: முடிகொண்டான்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், முடிகொண்டான்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், முடிகொண்டான், திருவாரூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கோதண்டராமர்

தாயார்

சீதா

தீர்த்தம்

இராமதீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

முடிகொண்டான்

மாவட்டம்

திருவாரூர்

மாநிலம்

தமிழ்நாடு

இராமர் தனது அவதாரத்தின் நோக்கமான, இராவணனை வதம் பண்ணுவதற்கு இலங்கை செல்லும்முன் இத்தலத்திலுள்ள பரத்வாஜ முனிவர் ஆசிரமத்திற்கு வருகை தந்தார். அப்போது முனிவர் இராமரிடம் தான் விருந்து தர விரும்புவதாக கூறினார். ஆனால் இராமரோ தற்போது முடியாது, நான் இராவணனை வதம் செய்து விட்டு திரும்பும்போது இங்கு விருந்து சாப்பிடுகிறேன் என்று வாக்குறுதி தந்தார். அதேபோல் இராவணனை வதம் செய்து விட்டு திரும்புகையில் இராமனது புஷ்பக விமானம் தற்போது கோயில் உள்ள இடமான பரத்வாஜ முனிவரது ஆசிரமத்தில் தரை இறங்கியது. இராமரும் விருந்து உண்ண தயாராகிறார். அப்போது தாம் விருந்து சாப்பிடும் முன் ஸ்ரீரங்கநாதரைப் பூஜை செய்த பின்பே சாப்பிடுவது வழக்கம் என்று தெரிவிக்க பரத்வாஜ முனிவர் ஸ்ரீரங்கநாதரைப் பிரதிஷ்டை செய்கிறார். இராமரும் அவரை வழிபட்டுவிட்டு முனிவர் தந்த விருந்தை உண்டார். விருந்து உண்ட இராமர் பரத்வாஜ முனிவருக்கு பட்டாபிஷேகத்திற்கு முன்பே முடி(மகுடம்)யுடன் இத்தலத்தில் காட்சி தந்தார். எனவே இங்குள்ள கோதண்டராமர் முடிகொண்டான் இராமர் என்றழைக்கப்படுகிறார்.