Tag Archives: குருவாயூர்

மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், குருவாயூர்

அருள்மிகு மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், குருவாயூர், திருச்சூர், கேரளா மாநிலம்.

+91 – 487- 255 425

காலை 6 மணி முதல் 11-30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகாதேவன்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் குருவாயூர்
மாவட்டம் திருச்சூர்
மாநிலம் கேரளா

கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட அவரது சொந்த வடிவம் கொண்ட விக்ரகம் கடலில் மிதந்தது. அதை குரு பகவானும், வாயுவும் சுமந்துகொண்டு, பூலோகத்தில் அதை பிரதிஷ்டை செய்வதற்குரிய இடத்தை தேடி அலைந்தனர். அவர்கள் பரசுராமனால் உருவாக்கப்பட்ட கேரளப் பகுதிக்கு வந்தனர். அங்கிருந்த உருத்ர தீர்த்தக்கரையில் விக்ரகத்தை வைத்தனர். அவ்விடத்தில் சிவபெருமான் குடிகொண்டிருந்தார். தன் கோயிலின் அருகிலேயே மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கட்டும் என அவர் அருள்பாலித்தார். அவ்வூரே குருவாயூர் ஆயிற்று. சிவபெருமான் குடியிருந்த தலம் மகிமை பொருந்தியது என்பதால், “மகிமையூர்என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மம்மியூராக மாறிவிட்டது.

கேரள பாணியில் ஓடு வேய்ந்த இக்கோயிலில், மகாவிஷ்ணு, கணபதி, சுப்ரமணியன், சாஸ்தா, பிரம்மராட்சஸ், நாகங்கள், பகவதியம்மன் ஆகியோருக்கு சன்னதி உள்ளது.