Tag Archives: திருக்கழுக்குன்றம்

அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம்

அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம். காஞ்சிபுரம் மாவட்டம்.

+91-44- 2744 7139, 94428 11149 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதகிரீஸ்வரர், பக்தவத்சலேஸ்வரர்
அம்மன் திரிபுரசுந்தரி
தல விருட்சம் வாழை மரம்
தீர்த்தம் சங்குதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கழுகுன்றம், திருக்கழுகுன்றம்
ஊர் திருக்கழுகுன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

பூஷா , விருத்தா என்கிற இரு முனிவர்கள் சாரூப பதவி வேண்டித் தவம் செய்தனர். இறைவன் தோன்றி வரம் தரும்போது,”சாயுஜ்ஜியப் பதவி தருகிறேன். இப்பதவியில் சில காலம் இருங்கள். பிறகு சாயுச்சியம் தருகிறோம்என்றார். அதை ஏற்க மறுத்த முனிவர்களை,”கழுகுருவம் அடைகஎன்று சாபமிட்டார். முனிவர்கள் கழுகுகளாய்ப் பிறந்தனர். சம்பு, ஆதி எனும் பெயருடன் மலைக் கோயிலை வலம் வந்து, தாங்கள் உண்டாக்கிய பட்சி தீர்த்தம் அருகில் உள்ள பாறையில் நாள்தோறும் அமுதுண்டு இறைவனை வழிபட்டு வருகின்றனர். தினமும் இராமேஸ்வரத்தில் ஸ்நானம் செய்து கழுக்குன்றத்தில் ஆகாரம் உண்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம். கழுகுகளுக்கு அமுதூட்டும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.

சுரகுரு மகாராஜாவுக்கு சுவாமி இத்தலத்தில் காட்சி தந்ததாகவும், அவரே இத்திருத்தலம் அமையக் காரணமாக இருந்தவர் என்றும் வரலாறு கூறுகிறது.

கழு கழுகு கங்கம் என்பன ஒருபொருள் குறிக்கும் சொற்கள்.
கழுகு வழிபட்டதால், வழிபடுகின்றதால் இத்தலத்திற்குத் திருக்கழுகுன்றம்எனப் பெயர் வந்தது.

இன்னுமொருகதை: பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனராம். முடிவில் சாருப்ய என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனராம். எனவே நான்கு யுகத்திற்கு இருவர், என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். நண்பகல் நேரத்தில் இக்காட்சியைக் காணலாம்.

குபேரலிங்கேசுவரர், திருக்கழுக்குன்றம்

அருள்மிகு குபேரலிங்கேசுவரர், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்.

ஆன்மிகச் சிறப்புகளைத் கொண்டு, தெய்வீகப் பொலிவால் தனித்து விளங்கும் திருக்கழுக்குன்றம் ஊர் நுழைவு வாயிலிலேயே மலையைப் பார்த்தவண்ணம் ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரர் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

சித்தபுருஷர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம். ஆவுடையார் மேடை பலவகை மருந்துகளால் செய்விக்கப்பட்டது. அந்த மேடையின் மேலே குன்றாத வளம் அருளும் அருள்மிகு குபேரலிங்கேஸ்வரரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

ஒரு காலகட்டத்தில் இத்திருக்கோயில் பூஜைகள் நின்றன. ஆலயமும் சிதிலமடைந்தது. இறைவனின் திருவிளையாடல். ஒரு பிரதோஷ தினத்தன்று, “உனக்கு மட்டும் வீடு கட்டிக்கொண்டு, எனக்கு வீடு கட்டாமல் இருக்கிறாயேஎன்று பக்தர் ஒருவரின் கனவில் அசரீரி ஒன்று தோன்றியது.