Tag Archives: திருப்பாடகம்

அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம்

அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44-2723 1899 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாண்டவ தூதர்
தாயார் சத்யபாமா, ருக்மணி
தீர்த்தம் மத்ஸ்ய தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பாடகம்
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது கேட்டு வாங்கி வர, துரியோதனனிடம் தூது சென்றவர் பகவான் கிருஷ்ணர். இவர் தான் பாண்டவர்களின் மிகப்பெரிய பலம். இவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன்.

எனவே கண்ணன் தூது சென்ற போது அவர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழே, பூமியில் ஒரு பெரிய நிலவறையை உண்டாக்கி, அதன்மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது. கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க வந்த மல்லர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார்.