Category Archives: திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் – ஆலயங்கள்

திருவாரூர் மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

அக்னிபுரீஸ்வரர் அன்னியூர்
பிரம்மபுரீஸ்வரர் அம்பல்(அம்பர்)
பாதாளேஸ்வரர் அரித்துவாரமங்கலம்
சாட்சிநாதர் அவளிவணல்லூர்
சொர்ணபுரீஸ்வரர் ஆண்டான்கோவில்
அசலேஸ்வரர் ஆருர் அரநெறி
சற்குணநாதர் இடும்பாவனம்
ஆதிநாராயணப்பெருமாள் எண்கண்
சுப்ரமணிய சுவாமி எண்கண்
ஜகதீஸ்வரர் ஓகைப்பேரையூர்
கைச்சின்னேஸ்வரர் கச்சனம்
வாசுதேவ பெருமாள் கடகம்பாடி
சற்குணேஸ்வரர் கருவேலி
கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர் ) கரைவீரம்
கற்பகநாதர் கற்பகநாதர்குளம்
கோணேஸ்வரர் குடவாசல்
ஸ்ரீநிவாசப் பெருமாள் குடவாசல்

சரஸ்வதி

கூத்தனூர்

கொழுந்தீஸ்வரர் கோட்டூர்
நடுதறியப்பர் கோயில் கண்ணாப்பூர்
வெண்ணி கரும்பேஸ்வரர் கோயில்வெண்ணி
மந்திரபுரீஸ்வரர் கோவிலூர்
முக்தீஸ்வரர் சிதலப்பதி
பொன்வைத்தநாதர் சித்தாய்மூர்
நீள்நெறிநாதர் தண்டலச்சேரி
பசுபதீஸ்வரர் திருக்கண்டீஸ்வரம்
பக்தவத்சல பெருமாள் திருக்கண்ண மங்கை
இராமநாதர் திருக்கண்ணபுரம்
சூடிக்கொடுத்த பெருமாள் திருக்கண்ணபுரம்
பாரிஜாதவனேஸ்வரர் திருக்களர்
கண்ணாயிரநாதர் திருக்காரவாசல்
ஐராவதீஸ்வரர் திருக்கொட்டாரம்
வில்வாரண்யேஸ்வரர் திருக்கொள்ளம்புதூர்
அக்னீஸ்வரர் திருக்கொள்ளிக்காடு
சூஷ்மபுரீஸ்வரர் திருச்சிறுகுடி, செருகுடி
கிருபாசமுத்திரப்பெருமாள் திருச்சிறுபுலியூர்
உத்திராபசுபதீஸ்வரர் திருச்செங்காட்டங்குடி
சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருச்சென்னம்பூண்டி
வெள்ளிமலைநாதர் திருத்தங்கூர்
நர்த்தனபுரீஸ்வரர் திருத்தலையாலங்காடு
அபிஷ்ட வரதராஜர் பெருமாள் திருத்துறைப்பூண்டி
பிறவி மருந்தீஸ்வரர் திருத்துறைப்பூண்டி
இரத்தினபுரீஸ்வரர் திருநாட்டியத்தான்குடி
நெல்லிவனநாதர் திருநெல்லிக்கா(வல்)
சவுந்தரேஸ்வர் திருப்பனையூர்
திருநேத்திரநாதர் திருப்பள்ளி முக்கூடல்
சேஷபுரீஸ்வரர் திருப்பாம்புரம்
வர்த்தமானீஸ்வரர் திருப்புகலூர்
அக்னிபுரீஸ்வரர் திருப்புகலூர்
மகாகாளநாதர் திருமாகாளம்
சகலபுவனேஸ்வரர் திருமீயச்சூர்
மேகநாதர் திருமீயச்சூர்
வண்டுறைநாதர் திருவண்டுதுறை
தியாகராஜர் திருவாரூர்
யக்ஞேயஸ்வரர் திருவாரூர்
புண்ணியகோடியப்பர் திருவிடைவாசல்
வீரட்டானேஸ்வரர் திருவிற்குடி
வீழிநாதேஸ்வரர் திருவீழிமிழலை
தூவாய் நாதர் தூவாநாயனார் கோயில்
தேவபுரீஸ்வரர் தேவூர்

நல்ல மாரியம்மன்

தொழுதூர்

மதுவனேஸ்வரர் நன்னிலம்
கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் பாடகச்சேரி
நாகநாதர் பாமணி
சதுரங்க வல்லபநாதர் பூவனூர்
அபிமுக்தீஸ்வரர் மணக்கால் ஐயம்பேட்டை
இராஜகோபாலசுவாமி மன்னார்குடி
ஏகாம்பரேஸ்வரர் மானந்தகுடி
கோதண்டராமர் முடிகொண்டான்
கோதண்டராமர் வடுவூர்
பரமசுந்தரர் வாழ்க்கை புத்தகளூர்
பதஞ்சலி மனோகரர் விளமல்
அகோர வீரபத்திரர் வீராவாடி
வாஞ்சிநாதசுவாமி ஸ்ரீ வாஞ்சியம்

அருள்மிகு பரமேஸ்வரி உடனுறை பரமசுந்தரர் திருக்கோயில், வாழ்க்கை புத்தகளூர்

அருள்மிகு பரமேஸ்வரி உடனுறை பரமசுந்தரர் திருக்கோயில், வாழ்க்கை புத்தகளூர், நன்னிலம் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.

+91 44 28152533, 9840053289, 9940053289

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பரமசுந்தரர்

அம்மன்

பரமேஸ்வரி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

நன்னிலம்

மாவட்டம்

திருவாரூர்

மாநிலம்

தமிழ்நாடு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புத்தகை என்ற மகாமுனிவர் சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். சில நாட்களில் அவரைச் சுற்றி புற்றுகள் சூழ்ந்தது. அவரது கை மட்டும் இந்த சிவனை (ஸ்ரீ பரமசுந்தரர்) நோக்கியே இருந்தது. ஓம் நமச்சிவாய என்ற ஒலி மட்டும் வந்ததாகவும், அவருடைய தல வலிமையை மெச்சிய சிவன் அவருக்கு தரிசனம் தந்து, இங்கு எழுந்தருளினார் என்றும் கூறப்படுகிறது. எம்பெருமான் இம்முனிவருக்கு காட்சி அளித்ததால் இந்த ஊர் திருப்புத்தகை என்றும் நாளடைவில் புத்தகளூர் என மருவி வழங்கப்படுகிறது. இதற்குச் சான்றாக இன்றும் இந்த ஊரில் நிறைய பாம்புகளும், பாம்பு புற்றுகளும் காணப்படுகின்றன. பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை.

கல்வெட்டு தகவலின்படி இன்றும் இந்த ஊர் கோயிலானது 10வது பாம்பு ஊர் என்று கூறப்படுகிறது. திருநாகேஸ்வரம், திருபாம்பிரத்திற்கு இணையாக பாம்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கோயில் அருகே நிறைய பெரிய பெரிய புற்றுகள் உள்ளன. இன்றும் ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் பாம்பானது சிவன்மேல் எந்தவித பயம் இல்லாமல் படுத்துக்கொண்டு மக்களுக்கு காட்சி அளிக்கிறது. அடிக்கடி சிவன் அருகிலே பாம்பானது சட்டை உரிப்பதும் ரொம்ப அதிசயமாகும். ஆனால் எத்தனை புகைப்படம், எப்படி எடுத்தாலும் பாம்பு மாத்திரம் காட்சி அளிக்கவில்லை என்பது உலக அதிசயம். ஆனால் பாம்புகள் கடிப்பதோ, கஷ்டமோ கொடுப்பதில்லை.