Tag Archives: புதுச்சேரி

வேதபுரீசுவரர் திருக்கோயில், புதுச்சேரி

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், புதுச்சேரி.

+91-413-233 6686

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதபுரீசுவரர்
அம்மன் திரிபுரசுந்தரி
தல விருட்சம் வன்னிமரம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வேதபுரிபுதுச்சேரி
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுச்சேரி

புதுவையின் கடற்கரையில் இருந்து மேற்கே சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பெரிய பிராமணர் வீதி, சிறிய பிராமணர் வீதி, காந்தி வீதி, மாதா கோயில் வீதி இவற்றிற்கிடையே சுமார் 238 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோயில் சிறப்புடன் விளங்கியது.

இத்திருக்கோயில் விபவ ஆண்டு ஆவணி மாதம் 20ம் தேதியன்று (1748)ல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதென்று ஆனந்த ரங்கர் நாள்குறிப்பில் இருந்து அறிய முடிகிறது. இப்படி பாழாகிப்போன இத்திருக்கோயில் கி.பி. 1788 ல் (இன்று காந்தி வீதியில் உள்ளது) மீண்டும் திவான் கந்தப்ப முதலியாரின் பெருமுயற்சியாலும், பொது மக்களின் ஒத்துழைப்பாலும் கட்டப்பட்டது.

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் , புதுச்சேரி

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் , புதுச்சேரி

+91-413-2336544(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை மணி 6 முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவ 10 மணி வரை திறந்திருக்கும்.


மூலவர்: – மணக்குள விநாயகர்

தீர்த்தம்: – மூலவருக்கு மிக அருகில் தீர்த்தம் உள்ளது.

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: – மணக்குளத்து விநாயகர்

ஊர்: – புதுச்சேரி

மாவட்டம்: – புதுச்சேரி

மாநிலம்: – புதுச்சேரி

தலவரலாறு

பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இங்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேல் பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர். புதுச் சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன. இந்த மணற்குளத்தின் கீழ்க் கரையில் தான் விநாயகர் ஆலயம் எழுப்பப் பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் வந்தது.