Tag Archives: விளமல்

அருள்மிகு பதஞ்சலி மனோகரர் கோயில், விளமல்

அருள்மிகு பதஞ்சலி மனோகரர் கோயில், விளமல், திருவாரூர் மாவட்டம்.

+91- 98947 81778, 99428 81778 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பதஞ்சலி மனோகரர் (விளமர், விமலன்)
அம்மன் யாழினும் மென்மொழியம்மை, மதுரபாஷிணி
தல விருட்சம் வில்வம், கிளுவை
தீர்த்தம் அக்னி தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவிளமர், திருவராகம்
ஊர் விளமல்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

பதஞ்சலி முனிவர் ஈசனின் நடனக்கோலம் காணத் தவமிருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த ஈசன் தில்லையில் தனது திருநடனத்தைக் காண்பித்தார். இந்த நடனத்தை வியாக்ரபாதரும் கண்டு மகிழ்ந்தார். அத்துடன் இரு முனிவர்களும் சிவனிடம், “ஐயனே! உனது நடனம் கண்டோம். இந்த ஆனந்த நடனத்துடன் தங்களின் அஜபா நடனத்தையும், உருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண விரும்புகிறோம். மேலும் உன் பக்தர்களுக்கும் உனது திருவடி தரிசனத்தை காண்பித்து அருளவேண்டும்என வேண்டினர். அதற்கு ஈசன், “நீங்கள் இருவரும் ஸ்ரீபுரம் என்று அழைக்கப்படும் திருவாரூர் செல்லுங்கள். அங்கே எனது நடனத்தையும், திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள்என்றார். அதன்படி இருவரும் திருவாரூர் வந்தனர். அங்கே எங்கு பார்த்தாலும் சிவலிங்கமே காட்சியளித்தது. எனவே பதஞ்சலி தன் உடலைப் பாம்பாகவும், வியாக்ரபாதர் தன் கால்களைப் புலிக்கால்களாகவும் மாற்றி, திருவாரூர் கமலாம்பாளை வணங்கினர். அவள் கூறியபடி விளமல்என்ற இடத்தில் விமலாக்க வைரம் என்ற தேவலோக மண்ணில் பதஞ்சலி முனிவர் இலிங்கம் பிடித்து வழிபட்டார். இந்த வழிபாட்டின் பலனாக சிவன் தோன்றி, அஜபா நடனம் ஆடி, தன் பாதத்தை காட்டி அருளினார். இந்த சிவன் பதஞ்சலி மனோகரர்என்று அழைக்கப்பட்டார். சிவபெருமான் நடன மாடியபோது காட்டிய திருவடி உருத்ரபாதம் எனப்பட்டது. அவர் நடனமாடிய இடம் விளமல் எனப்பட்டது. இதற்கு திருவடி எனப்பொருள். இந்த தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டு களித்தனர். சிவபெருமான் காட்டிய உருத்ரபாதத்திற்கு இன்றளவும், தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் திருவடி சேத்திரம், திருவிளமல், சிவபாத தலம்எனப் போற்றப்படுகிறது.