Tag Archives: மாங்காடு

அருள்மிகு வைகுண்டவாசர் திருக்கோயில், மாங்காடு

அருள்மிகு வைகுண்டவாசர் திருக்கோயில், மாங்காடு, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 2627 2053, 2649 5883 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வைகுண்டவாசர்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

தல விருட்சம்

மாமரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

மாங்காடு

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

கைலாயத்தில் ஒருசமயம் அம்பிகை சிவனின் கண்களை விளையாட்டாக மூடவே, உலகம் இருளில் மூழ்கியது. அம்பிகை மீது கோபம்கொண்ட சிவன், அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்துவிட்டார். பூலோகம் வந்த அம்பிகை மானிடப்பெண்ணாக பிறந்தாள். இருப்பினும், சிவன் மீது கொண்ட பக்தியால், தன்னைத் திருமணம் செய்யக்கோரி கடுந்தவம் செய்தாள். தங்கையை தாரை வார்த்துக் கொடுக்க வைகுண்டத்திலிருந்து மகாவிஷ்ணுவும் சீர் கொண்டு வந்தார். அச்சமயத்தில், அசுரகுருவான சுக்கிராச்சாரியாரும், தனது சில கோரிக்கைகளை நிறைவேற்ற, சிவனை வேண்டிப் பூலோகத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். தனது குடும்பத்தை விட பக்தனுக்கே முதலிடம் தந்த சிவன், சுக்ராச்சாரியாருக்கு முதலில் காட்சி தந்தார். அம்பிகையும், சுக்ராச்சாரியாரும் தவம் புரிந்துகொண்டிருந்த இடம் இன்றைய மாங்காடு (சென்னை) எனசொல்லப்படுகிறது. சுக்ராச்சாரியாருக்கு வரமருளிய சிவன், அம்பிகைக்கும் காட்சி தந்து, உன்னை காஞ்சித்தலத்தில் மணப்பேன் என உறுதியளித்தார். அம்பிகையும் அவர் சொற்படி காஞ்சிபுரம் சென்று தவத்தை தொடர்ந்தாள். பூலோகம் வந்த மகாவிஷ்ணு, மாங்காட்டில் தங்கையைக் காணாமல் தவித்த வேளையில், மார்க்கண்டேய மகரிஷி அவரைக் கண்டு நடந்த கதையைக் கூறினார். புண்ணியத்தலமான மாங்காட்டில் வைகுண்டவாசர் என்ற பெயரில் தங்கும்படியும் கேட்டுக் கொண்டார். பெருமாளும் அத்தலத்தில் எழுந்தருளினார்.

வெள்ளீஸ்வரர் திருக்கோயில், மாங்காடு

அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில், மாங்காடு, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2627 2053, 2649 5883, 94444 61383

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வெள்ளீஸ்வரர் (பார்க்கவேஸ்வரர்)
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் சுக்ர தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 2000 வருடங்களுக்கு முன்
ஊர் மாங்காடு
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் ஒருசமயம் சிவன், தனித்து அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் வந்த அம்பிகை, விளையாட்டாக அவரது கண்களை மூடினாள். இதனால், உலகம் இருளில் மூழ்கியது. எனவே, அம்பிகை மீது கோபம்கொண்ட சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்துவிட்டார். அம்பிகை, தவறை மன்னித்து அருளும்படி சிவனிடம் வேண்டினாள். அவர் பூலோகத்தில், இத்தலத்தில் தவமிருந்து வழிபட, குறிப்பிட்ட காலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி அம்பிகை இத்தலத்திற்கு வந்து பஞ்சாக்னியில் நின்று தவம் செய்தார். அவளுக்கு அருள்புரிவதற்காக சிவன், இத்தலத்திற்கு வந்தார். இதனிடையே, சுக்கிராச்சாரியாரும் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்.