Tag Archives: சோழவந்தான்

அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான்

அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான்– 625 214, மதுரை மாவட்டம்.

*******************************************************************************************************

+91-4543-258987, 94431 92101(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

ரேணுகாதேவி சமதக்கினி முனிவரை மணம் முடித்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள். கணவரின் பூசைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வனின் நிழலை நீரில‌ே கண்டு அவன் அழகில் மயங்கி வியந்ததால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார்.

மகன் பரசுராமரை அழைத்து, தாயின் தலையை வெட்டிக் ‌கொண்டு வரும் படி கூற, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் வாக்குகிணங்க அன்னையின் தலையைப் பரசுராமர் கொய்தார். இருப்பினும் பெற்ற தாயை வெட்டி விட்டேன் என்று கூற முனிவரும் வரம் கேள் தருகிறேன் என்று பரசுராமரிடம் கூறினார். தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி ‌‌கேட்டார். முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதித் தந்தார். அதைபெற்றுக் கொண்டு வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்துத் தண்ணீரை தெளி்க்க உயிர் பெற்றார். அதனால் அந்த உயிர் அரக்கி ஆகின்றது. அரக்கியின் சினம் அதிகரிக்கின்றது. அரக்கியை அடக்கும் பொருட்டு இத்தலத்தில் அமைதியின் வடிமாக மாரி எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். இன்னமும் கர்ப்பகிரகத்தில் அம்மனுக்கு பின்புறம் சந்தனமாரி எனும் நின்ற நிலையிலான ஆக்ரோச ரேணுகாதேவி காட்சி தருகிறாள்.

அழகிய பசுமை வனம் போன்ற சோழவந்தான் பகுதியின்‌ வைகை ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஆலயம். இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.