Tag Archives: தென்திருப்பேரை

கைலாசநாதர் திருக்கோயில், தென்திருப்பேரை

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தென்திருப்பேரை, திருநெல்வேலி மாவட்டம்

+91- 93658 89291

காலை 7 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் அழகிய பொன்னம்மை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தாமிரபரணி
ஆகமம் காமீகம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் தென்திருப்பேரை
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

அகத்தியரின் சீடர் உரோமசர் சிவதரிசனம் பெற விரும்பினார். அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி தீர்த்தத்தில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டார். அதில், ஏழாவது மலர் கரையொதுங்கிய தலம் இது. இங்கு கைலாசநாதர் இலிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் பீடம் தாமரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தின் அனுக்கிரகம் பெற விரும்புபவர்கள், சுவாமிக்கு பச்சை நிற ஆடை சாத்தி, பாசிப்பயிறு மற்றும் சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். கைலாசநாதருக்கு வலப்புறத்தில் அம்பிகை அழகியபொன்னம்மை சன்னதியில் கிழக்கு நோக்கியிருக்கிறாள்.

அருள்மிக மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை

அருள்மிக மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை – 628 623, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகரநெடுங் கு‌ழைக்காதர்
உற்சவர் நிகரில் முகில் வண்ணன்
தாயார் குழைக்காது வல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார்
தீர்த்தம் சுக்ரபுஷ்கரணி, சங்க தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பேரை
ஊர் தென்திருப்பேரை
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

இங்குள்ள ஆலயம் மிகப்பெரியதாகும். பூதேவி, துர்வாசர் உபதேசித்த அஷ்டாட்சர மந்திரத்தை ஜபித்து, தவம் செய்து, தாமிரபரணியில் மூழ்கி எழும்போது இரண்டுபெரிய குண்டலங்களைப் பெற்றாள். ஸ்ரீபேரை என்ற திருநாமம் பெற்றாள். பங்குனி பவுர்ணமியில் தாமிரபரணியில் பெற்ற மீன்வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க, பகவான் அவைகளை அணிந்ததால் மகரநெடுங்கு‌ழைக்காதன் என்ற நாமம் பெற்றார். பூமி‌தேவி ஸ்ரீபேரை என்ற நாமம் பெற்றதால், இத்தலத்திற்குத் திருப்பேரை என்ற பெயர் ஏற்பட்டது. வருணன் குருவை நிந்த‌ை செய்த பாவம் விலக பங்குனி பவுர்ணமியில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து, பாவம் விலகி நன்‌மை அடைந்ததாகத் தல வரலாறு கூறுகிறது.