Tag Archives: திருநின்றவூர்

இருதயாலீசுவரர் திருக்கோயில், திருநின்றவூர்

அருள்மிகு இருதயாலீசுவரர் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்.

+91-94441 64108

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்    –         இருதயாலீஸ்வரர் (மன ஆலய ஈஸ்வரர்)
அம்மன்    –         மரகதாம்பிகை, மரகதவல்லி
தல விருட்சம்    –         வில்வம்
பழமை    –         1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்    –         திருநின்றவூர்
மாவட்டம்    –         திருவள்ளூர்
மாநிலம்    –         தமிழ்நாடு

நாயன்மார்களில் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் பிறந்தவர். இவர் தினமும் அவ்வூரிலுள்ள சிவலிங்கம் ஒன்றைத் தரிசித்து வந்தார். மேற்கூரை இல்லாத அந்த இலிங்கம் வெயிலிலும், மழையிலும் நனைந்தது. இதைப்பார்த்த பூசலாருக்கு சிவனுக்கு கோயில் கட்ட ஆசை எழுந்தது. இவரோ பரம ஏழை. எனவே சிவனை தன் மனதில் இருத்தி, தன்னிடம் ஏராளமான பணம் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டார். மனதுக்குள்ளேயே கோயில் கட்ட ஆரம்பித்தார். அந்தக் கோயிலில் இல்லாத பொருளே இல்லை. செய்யாத வசதியே இல்லை.