Category Archives: சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் – ஆலயங்கள்

சிவகங்கை மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

திருவேங்கடமுடையான் அரியக்குடி

வெட்டுடையா காளி

அரியாக்குறிச்சி

ஆழிகண்டீஸ்வரர் இடைக்காட்டூர்
ஆட்கொண்டநாதர் இரணியூர்

அட்சய பைரவர்

இலுப்பைக்குடி

தான்தோன்றீஸ்வரர் இலுப்பைக்குடி
இராஜேந்திர சோழீஸ்வரர் இளையான்குடி

பொன்னழகியம்மன்

.சிறுவயல்

கொப்புடை நாயகி அம்மன்

காரைக்குடி

முத்துமாரி அம்மன்

காரைக்குடி

சொர்ணகாளீஸ்வரர் காளையார் கோவில்
பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) கீழப்பூங்குடி

சண்முகநாதர்

குன்றக்குடி

உருத்ரகோடீஸ்வரர் சதுர்வேதி மங்கலம்
வீரசேகரர் சாக்கோட்டை

சேவுகப் பெருமாள்

சிங்கம்புணரி

சசிவர்ணேஸ்வரர் சிவகங்கை
சுந்தரராஜப் பெருமாள் சிவகங்கை
அக்னி வீரபத்திரர் சூரக்குடி
பரஞ்சோதி ஈசுவரர் (ஞானாம்பிகை) தஞ்சாக்கூர்

முத்துமாரியம்மன்

தாயமங்கலம்

சவுமியநாராயணபெருமாள் திருகோஷ்டியூர்
திருநோக்கிய அழகிய நாதர் திருப்பாச்சேத்தி
திருத்தளிநாதர் திருப்புத்தூர்
வெண்பட்டு பைரவர் (திருத்தளிநாதர்) திருப்புத்தூர்
பூவணநாதர் (புஷ்பவனேஸ்வரர் ) திருப்புவனம்
மலைக்கொழுந்தீஸ்வரர் திருமலை
பாகம்பிரியாள் திருவெற்றியூர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் (சேக்கிழார்) தேவகோட்டை
தேசிகநாதசுவாமி நகர சூரக்குடி

கண்ணுடைய நாயகி அம்மன்

நாட்டரசன்கோட்டை

தட்சிணாமூர்த்தி பட்டமங்கலம்

புல்வநாயகி

பாகனேரி

கொடுங்குன்றநாதர் பிரான்மலை

சுப்பிரமணியர்

பில்லூர், கோவனூர்

விநாயகர் பிள்ளையார்பட்டி

பிள்ளைவயல் காளியம்மன்

பிள்ளைவயல், பையூர்

இரட்டை முக பைரவர்

பெரிச்சிகோயில்

சுகந்தவனேஸ்வரர் பெரிச்சிகோயில்
பத்திர காளியம்மன் மடப்புரம்
சோமநாதர் மானாமதுரை
வீர அழகர் மானாமதுரை
சுந்தரராஜ பெருமாள் வேம்பத்தூர்
வைரவன் சுவாமி வைரவன்பட்டி

அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை

அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.

காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வீர அழகர் (சுந்தர்ராஜப்பெருமாள்)

தாயார்

சவுந்தரவல்லி என்ற மகாலட்சுமி

ஆகமம்

பாஞ்சராத்ரம்

தீர்த்தம்

அலங்கார தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

வானரவீர மதுரை

ஊர்

மானாமதுரை

மாவட்டம்

சிவகங்கை

மாநிலம்

தமிழ்நாடு

மதுரைக்கு அருகே உள்ள அழகர் கோயிலைப் போன்றே இத்தலத்தில் உள்ள மூலவரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தர்ராஜபெருமாள். இத்திருக்கோயிலை மாவலி வாணாதிராயர் என்ற மன்னர் கட்டினார். மாவலி வாணாதிராயருக்கு தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு சிறப்பான இடம் உண்டு. இந்த மன்னருக்கு மதுரை அழகர்கோவில் சுந்தர்ராஜப் பெருமாளிடத்தில் மிகுந்த பக்தி உண்டு. இந்த பெருமாளைப் பார்க்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார். இந்நிலையில் ஒரு நாள் மன்னருக்கு சுந்தர்ராஜபெருமாளைப் பார்க்கச் செல்ல இயலாத அளவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. பெருமாளைப் பார்க்க இயலாததால் மன்னர் மிகுந்த வேதனைப் பட்டார். உடனே பெருமாள், மன்னரின் கனவில் தோன்றி, “மன்னா, நீ இருக்கும் இடத்தில் வைகை ஆற்றின் கிழக்கு கரையில் எனக்கு ஒரு கோயில் கட்டி அதில் பெருமாளைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா. இதனால் உனக்கு மதுரை அழகர்கோவிலில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்எனக் கூறி மறைந்தார். மன்னனும் பெருமாள் கூறியபடி கோயில் கட்ட நினைத்தான். ஆனால் எந்த இடத்தில் கோயில் கட்டுவது என குழம்பினான். பெருமாள் மன்னனின் குழப்பம் தீர, ஒரு எலுமிச்சம்பழத்தை ஆற்றில் விட, அந்த எலுமிச்சம்பழத்தின் ஒரு பகுதி எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு கோயிலையும், மறுபாதி விழும் இடத்தில் கோயிலுக்கான குளத்தையும் வெட்டுமாறு ஆணையிட்டு மறைந்தார். எனவேதான் கோயிலிலிருந்து குளம் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.